அவங்க சொல்றது எல்லாம் பொய், அர்ஜூன் சாரே அந்த விஷயம் தெரிஞ்சதும் நிகழ்ச்சி குழுவிடம் சண்டை போட்டார் – சரண் சொன்ன பல ஷாக்கிங் உண்மைகள்.

0
767
saran
- Advertisement -

முதல் முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பிய நிகழ்ச்சி தான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சி ஒன்றும் புதிதான நிகழ்ச்சி கிடையாது. ஏற்கனவே இது பல்வேறு வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் இந்த நிகழ்ச்சி தமிழில் வருவது முதல் முறை. அதேபோல இந்த நிகழ்ச்சியில் வந்த டாஸ்க்குகள் பிக் பாஸுக்கே டப் கொடுக்கும் விதமாக தான் இருந்தது. மேலும், முதலில் இந்த நிகழ்ச்சியில் 16 பேர்கள் கலந்து கொண்டு காடர்கள், வேடர்கள் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பல சவால்கள் கொடுக்கப்பட்டது.

-விளம்பரம்-

கடுமையான பல போட்டிகள், சவால்கள் என்று நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றது. பின் அனைவரும் எதிர்பார்த்த 90 நாட்கள் சர்வைவர் முடிவில் விஜயலட்சுமி டைட்டிலை தட்டி சென்றார். இது ஒரு பக்கம் இருக்க இந்த நிகழ்ச்சியின் போட்டியாளராக சரண் கலந்து கொண்டிருந்தார். இவர் இந்த நிகழ்ச்சியில் திறமையாக விளையாடி வந்தார். இருந்தும் சில இடங்களில் இவருக்கும் நடிகர் அர்ஜுனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் பிற போட்டியாளர்கள் இடையே சில பிரச்சனைகள் வந்தது. அந்த வகையில் சரண் செல்போனை பயன்படுத்தி இருந்ததால் அர்ஜுன் ‘உங்களுக்கு அறிவு இல்லையா’. ஒருத்தரை நம்பி இந்த ஷோ கிடையாது.

- Advertisement -

இன்னும் விளையாடிட்டு இருக்காங்க :

நாங்க போயிடறோம்னு இங்க பூச்சாண்டி கீச்சாண்டிலாம் எதுவும் பண்ண வேண்டாம் என்று கடும் கோபத்துடன் சரணை திட்டி இருந்ததை அனைவரும் பார்த்திருப்போம். இந்நிலையில் சர்வைவர் நிகழ்ச்சிக்குப் பிறகு சரண் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் விஜி குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இந்த போன் பிரச்சனை நிறைய இன்டர்வியூவில் நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கு அவர் பேசவில்லை என்றெல்லாம் சொன்னார். ஆனால், அது உண்மை இல்லை. ஏன் கேம் முடிந்தும் வெளியில் இன்னும் விளையாடுகிறார்கள் என்று புரியவில்லை.

விஜி போன் பேசினாரா ? :

என் இடம் அவர்கள் பேசியதற்கான ஆதாரம் இல்லை என்றாலும் நான் உறுதியாகச் சொல்வேன். ஏனென்றால் நான் பேசியதற்கு பிறகு தான் விஜி போன் பேசினார். பின் அவர்கள் யாரிடம் பேசினார்கள்? என்ன பேசினார்கள்? என்பதை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால், அர்ஜுன் சார் கேட்கும் போது மத்தவங்க யாருமே எதுவும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை. மறுநாளே அவர்கள் பேசின காலை அங்கு இருந்த டெக்னிசியன் இடம் இருந்து வாங்கி டெலிட் செய்து விட்டார்கள். இதெல்லாம் எனக்கு தெரியும். மேலும், நான் அதையும் கண்டுகொள்ளவில்லை.

-விளம்பரம்-

சர்வைவர் குழுவிடம் சண்டை போட்ட அர்ஜுன் :

இதனால் தான் எனக்கும் அர்ஜுன் சாருக்கும் இடையே பிரச்சினை வந்தது. நான் அவரிடம் மன்னிப்பும் கேட்டேன். ஏன்னா, அவருக்கு அங்கு முழுவதுமாக என்ன நடந்தது என்று தெரியாது? சின்ன சின்ன விஷயத்தை வைத்து தான் அவர் பேசுவார். ஆனால், விஜி போன் செய்த விஷயம் அவருக்குத் தெரியாது. அதற்குப் பிறகு தான் அவருக்கு தெரிந்தது. உடனே அவர் ஏன் நீங்கள் சரணை மட்டும் கேட்க சொன்னீர்கள்? அவனை மட்டும் வெளியே போக சொன்னீர்கள்? என்று நிகழ்ச்சி குழுவிடம் சண்டையெல்லாம் போட்டிருந்தார். இது குறித்துக் கூட அவர் இன்டர்வியூவில் பேசியிருந்தார். நான் இதை ஒரு கேம்மாக தான் பார்த்து விளையாடினேன்.

வெளியே வந்து விஜியிடம் பேசாத காரணம் :

ஆனால், இதை பிறர் வேற மாதிரி எல்லாம் நினைத்து விளையாடினார்கள். அதேபோல் விஜி டைட்டில் வின்னர் வாங்கியதற்கு நான் போன் பண்ணி பேச வில்லை என்று சொன்னார்கள். நான் ஏன் பேசவில்லை என்றால், அவர்கள் on-screen முன்னாடி ஒரு கேம் விளையாடுகிறார்கள். ஆப் ஸ்கிரீனுக்கு பின்னாடி ஒரு கேம் விளையாடுகிறார்கள். அதனால் அவர்கள் எப்படி? என்ன? என்று தெரிந்து எனக்கு பேச தெரியவில்லை. அதனால் தான் நான் வெளியே வந்தும் பேசவில்லை. அப்படியே விட்டுவிட்டேன் என்று கூறியிருந்தார். தற்போது இவர் பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement