அவருக்கு வயசாகிடிச்சி, முடியல – திட்டம் தீட்டும் போட்டியாளர்கள். பதிலடி கொடுத்த பெசன்ட் ரவியின் மகள்.

0
1438
survivor
- Advertisement -

சமீபகாலமாகவே ஒவ்வொரு சேனலும் தங்களின் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமாக நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சி சர்வைவர் என்ற ரியாலிட்டி ஷோவை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறார்கள். ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் சர்வைவர். நடிகர் அர்ஜுன் முதல் முறையாக தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியில் 16 பேர்கள் கலந்து கொண்டு காடர்கள், வேடர்கள் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு சவால்கள் தொடங்கின. இதில் தற்போது எலிமினேஷன் உடன் மும்முரமான சவால்கள் தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே போட்டியாளர்களுக்குள் மோதலும், சர்ச்சைகளும் சலசலப்புகளும் தொடங்கிவிட்டது. அதோடு போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை குறித்து பல்வேறு விதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மற்ற போட்டியாளர்கள் பெசன்ட் ரவி வயதானவர் அவரால் இங்கே சர்வைவர் பண்ண முடியாது.

இதையும் பாருங்க : அடுத்தவங்கள நக்கல் அடிக்கும்போது தெரில இப்போ தெரியுதா – கேலி செய்த விஜய் ரசிகர்களுக்கு தன் ஸ்டைலில் பதிலடி கொடுத்த ப்ளூ சட்டை

- Advertisement -

அவரை வீட்டிற்கு அனுப்புவது தான் நல்லது என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் கூறிய கருத்திற்கு பெசன்ட் ரவி மகள் ஸ்வேதா கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததால் என் அப்பா நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார் என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், ரியல் லைப்பில் அவர் தான் ஹீரோ. சர்வைவர் நிகழ்ச்சியில் அப்பாவோட வயதை வைத்து ஒரு பேச்சு போயிட்டு இருக்கு. மற்ற போட்டியாளர்களை ஒப்பிடும்போது அப்பா அவர்களை விட வயதில் மூத்தவர் தான்.

ஆனால், அவர்களுக்கு சமமாக அப்பாவும் போட்டி போடுவதை பார்க்கும் போது எனக்கு பெருமையாக இருக்கு. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் எங்க அப்பாவோட டெடிகேஷன் மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. நிஜ வாழ்க்கையிலும் அப்பா சர்வைவர் தான் என்று கூறியிருக்கிறார். தற்போது அவர் பேசிய கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement