எனக்கு இப்படி சத்தியம் செஞ்சிட்டு தான் சர்வைவர்க்கே போனான், அதனால் சந்தோசம். தன் மகன் குறித்து தம்பி ராமய்யா.

0
2713
umapathy
- Advertisement -

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய பிறகும் ஜீ தமிழ் சர்வைவர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதில் காடர்கள் அணி தான் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. காடர்கள் அணையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக பார்க்கப்படுபவர் உமபதி. உமாபதி வேற யாரும் இல்லைங்க நடிகர் தம்பி ராமையாவின் மகன். தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தம்பி ராமையா. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

-விளம்பரம்-

தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த விநோதய சித்தம் படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் தம்பி ராமையா அவர்கள் தன் மகன் தனக்கு கொடுத்த வாக்கு குறித்து உணர்வுபூர்வமான சில விஷயங்களை பேட்டியில் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு இரண்டு பிள்ளைகள். பொண்ணுக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் இருக்கு. இளையவன் தான் உமாபதி.

இதையும் பாருங்க : உங்க ரெண்டு பேருக்கும் விவாகரத்து ஆகிடுச்சா – கணவர் இறப்பிற்கு பின் பாவனி விரும்பிய நபர் கொடுத்த பதில்.

- Advertisement -

நான் என் மகனிடம் எப்படி இருக்கனும் இருக்கக் கூடாது என்று என் தந்தையிடம் தான் கற்றுக்கொண்டேன். நான் உணர்த்தி எதையும் அவன் புரிந்து கொள்ளும் சூழலுக்கு தள்ளக் கூடாது என்று நினைத்து தான் அவனை வளர்த்தேன்.என் மகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்று இருக்கிறான். அவனுக்கு சின்ன வயதிலிருந்தே சாகசங்கள் நிறைய பண்ண வேண்டும் என்ற ஆசை. அது மட்டுமில்லாமல் பிட்னஸ் விஷயத்தில் அதிக ஈடுபாடு உண்டு.

இன்டர்நேஷனல் பைட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பதுதான் அவனுடைய கனவு. நான் எத்தனையோ இயக்குனர்களிடம் டிராவல் பண்ணி இருக்கிறேன். ஆனால், இதுவரை என் மகனுக்காக யார்கிட்டயும் நான் வாய்ப்பு கேட்டு போனதில்லை. அவனும் என் பெயரை பயன்படுத்தி சினிமாவில் நடிக்க வேண்டும் என்று வாய்ப்பு தேடி அலைந்தது இல்லை. என் மகனை ஹீரோவாக வைத்து மணியார் குடும்பம் என்ற ஒரு படம் எடுத்தேன். அந்த படம் நன்றாக இருந்தது. ஆனால், அதை மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்த்த விதம் தான் எனக்கு தெரியவில்லை. அது நான் செய்த தப்பு. நான் அதை சரியாக பயன்படுத்தி இருந்தால் என் மகன் நல்ல இடத்திலிருந்து இருப்பான் என்று எனக்கு தோன்றியது.

-விளம்பரம்-

அதற்குப் பிறகுதான் அவன் சர்வைவர் நிகழ்ச்சியில் செல்கிறேன் என்று கூறினார். நாங்களும் அவன் மீது வைத்த நம்பிக்கையில் அனுப்பி வைத்தோம். நிகழ்ச்சியில் எங்க அப்பாவோட பெயர் எனக்கு விசிட்டிங் கார்டு மட்டும் தான் கிரெடிட் கார்டு இல்லை என்று சொன்னது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. நிகழ்ச்சியில் அவன் விளையாடுவது ரொம்ப அருமையாக இருக்கிறது. என் மகன் நிகழ்ச்சிக்கு போகும் போது குடும்பத்தை நான் பார்த்துகிறேன். எனக்காக நீங்க பட்ட கடன்களை எல்லாம் நான் பார்த்துகிறேன்.

நீங்கள் அடிக்கடி சொல்ற மாதிரி உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். பிடித்தவங்களோட செய்யுங்கள் என்று சொல்லி விட்டுத் தான் போனான். இனிமேல் எனக்கு எந்த கவலையும் இல்லை. என் மகன் ஒரு நல்ல இடத்திற்கு வந்து விடுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனக்கு பிடித்ததை பிடித்த அவங்களோட செய்யப் போறேன். இதைவிட எனக்கு வேற என்ன வேண்டும் என்று நெகிழ்ச்சியோடு தம்பி ராமையா கூறியிருந்தார்.

Advertisement