உங்க ரெண்டு பேருக்கும் விவாகரத்து ஆகிடுச்சா – கணவர் இறப்பிற்கு பின் பாவனி விரும்பிய நபர் கொடுத்த பதில்.

0
7447
pavni
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் இரண்டு வாரத்தை கடந்துவிட்டது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான ரகங்களை விட முகம்தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும்.

-விளம்பரம்-

அந்த வகையில் பாவனி ரெட்டியும் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு நடிகை தான். கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவருடன் ஒரு சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் மகிழ்ச்சியாகி வாழ்ந்து வந்த இருவரது வாழ்க்கையிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இதையும் பாருங்க : ‘கண்டதும் காதல் என்பது இதான்’ – பிக் பாஸ் 1 பிரபலத்துடன் அஜித்தின் ரேஸ் தோழி பதிவிட்ட புகைப்படம்.

- Advertisement -

திருமணமா 8 மாதத்தில் 2017 மே மாதம் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் கணவர் பிரதீப். அதன் பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை பாவனி, ஆனந்த் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார். ஆனால், இவரை பற்றி பாவனி கடந்து வந்த பாதை டாஸ்கில் சொல்லவில்லை.

This image has an empty alt attribute; its file name is 1-88-728x1024.jpg

இதனால் பாவனி மீது பல விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், பாவனி முதல் கணவர் இறப்பிற்கு பின் ஒருவரை விரும்பினார் என்றும் அவரை திருமணம் செய்துகொள்ள இருந்ததாகவும் ஆனால், அவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த திருமணம் நடக்கவில்லை என்று விளக்கமளித்தார் பாவனியின் அக்கா சிந்து.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பாவனியை இரண்டாம் திருமணம் செய்வதாக இருந்த ஆனந்த் ஜாய், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாவனியின் பிக் பாஸ் என்ட்ரி குறித்து வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த பதிவில் ரசிகர் ஒருவர் ‘நீங்கள் ரெண்டு பெரும் விவாகரத்து செஞ்சிடீங்களா ?’என்று கேட்க அதற்கு ஆனந்த் ‘விவாகரத்தா, இல்லை எங்களுக்கு கல்யாணம் கூட ஆகவில்லை’ என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement