இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ஜெய்பீம். இந்த படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், லிஜோமோள் ஜோஸ் என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தையும், அவர்களுடைய கஷ்டத்தையும் வெட்ட வெளிச்சமாக காட்டி இருக்கிறது. இந்த படம் பல தரப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் ஒரு சில சமூகத்தினர் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து.
இதற்காக பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்த வண்ணம் இருந்தது. இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த நிலையில் இந்த படத்தில் முதன்முதலாக வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவலை சூர்யா பகிர்ந்திருக்கிறார். தீரன் அதிகாரம் ஒன்று, ஜெய்பீம், வலிமை படங்களின் கலை இயக்குனர் கதிர். இவர் சென்னை அருகே உள்ள வானகரத்தில் திருமண மண்டபம் ஒன்றை கட்டியிருக்கிறார்.
இதையும் பாருங்க : நட்பிற்காக 11 வருடம் கழித்து ரீ-என்ட்ரி கொடுக்கும் விஜயகாந்த். யார் படத்தில் தெரியுமா ?
அதனுடைய திறப்பு விழா நேற்று நடந்தது. அதில் பல கலைஞர்களும், ஓவியக் கலைஞர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலர் கலந்து கொண்டு இருந்தனர். இந்நிலையில் இந்த விழாவில் பங்கேற்ற ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்கள் ஜெய் பீம் படம் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியது, திறப்பு விழாவில் கலந்து கொள்ள நான் கிளம்பினேன். அப்போது நான் சிவகுமார் வீட்டிற்குப் போய் இருந்தேன். அங்கே போனதும் சூர்யாவிடம் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோன்.
ஜெய்பீம் படம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்ததால் படத்தை பற்றி சூர்யாவிடம் பேசினேன். அப்போது இந்த படம் முதலில் சின்ன அளவில் எடுக்க இருந்ததாகவும், விஜய் சேதுபதியை வைத்து பண்ணலாம் என்றும் முடிவு செய்து இருந்தார்களாம். பிறகு இந்த படம் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக வந்ததால் இதில் நானே ஏன் பண்ண கூடாது? என்று சூர்யாவிற்கு தோனி இருக்கிறது.அதற்கு பின் தான் சூர்யா இந்த படத்தில் நடித்தார் என்று கூறினார்.