‘யாரும் நன்கொடை கொடுக்க வேண்டாம்’ – சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் திடீர் அறிவிப்பு.

0
697
Surya
- Advertisement -

சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா அவர்கள் ரோலக்ஸ் என்ற தோற்றத்தில் நடித்து இருந்தார். அதேபோல் மாதவனின் ராக்கெட்டரி தி நம்பி விளைவு என்ற படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இப்படி இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

சூர்யா மற்றும் பாலா கூட்டணி:

தற்போது சூர்யா மற்றும் பாலாவின் கூட்டணியில் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா– பாலா இணைந்து படத்தில் பணியாற்றி வருவது ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை அளித்து இருக்கிறது. படத்திற்கு வணங்கான் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார்.

சூர்யா நடிக்கும் படங்கள்:

பின் சூர்யா அவர்கள் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். முதன் முறையாக சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு சூர்யா 42 என்று பெயர் இடப்பட்டுள்ளது. இந்த படத்தை யூவி கிரியேஷன் நிறுவனமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அதற்கு பின் பா.ரஞ்சித்-சூர்யா கூட்டணியில் படம் உருவாக இருக்கிறது.

-விளம்பரம்-

அகரம் அறக்கட்டளை:

இப்படி சூர்யா அவர்கள் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அகரம் அறக்கட்டளையின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். 2006ஆம் ஆண்டிலிருந்து இவர் சமூக சேவையில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். இதில் பல மாணவர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். ஏழ்மையால் கல்வி கற்க முடியாமல் கஷ்டப்படும் மாணவர்களுக்காக இவர் தன்னுடைய அறக்கட்டளையின் மூலம் கல்வி உதவி செய்து வருகிறார். மேலும், இந்த அறக்கட்டளை மூலம் கிராமத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் முதல் தலைமுறை பட்டதாரிகளாக உருவாக்கி இருக்கின்றனர்.

அகரம் அறக்கட்டளை அறிவித்த அறிவிப்பு:

இந்த நிலையில் அகரம் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக்கர்களால் முடுக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து அகரம் அறக்கட்டளையின் சார்பில் கூறியிருப்பது, இன்ஸ்டாகிராம் கணக்கு மீட்கப்படும் வரை யாரும் எந்த ஒரு நிதி உதவியும் செய்ய வேண்டாம். எந்தவித குறு செய்தியை அனுப்ப வேண்டாம். அதோடு instagram பக்கம் ஹேக் செய்யப்பட்டதை எடுத்து பிற சோசியல் மீடியா மூலமாக நன்கொடையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது. யாராவது தொடர்பு கொண்டு கேள்விகளை எழுப்பினால் பதில் அளிக்க வேண்டாம். பிரச்சனை சரி செய்ய முயற்சித்து வருகிறோம் என்று கூறப்பட்டிருக்கிறது.

Advertisement