கஜா புயலால் பதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் செய்த உதவி.!

0
599
Surya-and-karthi

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயலால் பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டது. பல்வேறு மக்களும் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கஜா புயலால் பதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சூர்யா குடும்பம் சார்பாக 50 லட்சம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், பட்டுக்கோட்டை அருகே தண்டா குளத்துக்கரை என்ற குக்கிராமத்தில் வசித்து வந்த 50 குடும்பங்கள் கஜா புயலில் சிக்கி தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இது குறித்து தகவலறிந்து, அப்பகுதியை பார்வையிட்ட சூர்யா-கார்த்தி நற்பணி இயக்கத்தினரிடம், தென்னங்கீற்று வேய்ந்த கூரை வீடுகள் வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

- Advertisement -

இந்த தகவலை அறிந்த சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கல் இரு தரப்பினரும் பாதிக்க பட்ட மக்களுக்கு சுமார் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பில் 15 வீடுகள் கட்டித்தர நற்பணி இயக்கத்தினர் திட்டமிட்டுள்ளனர். அதற்கான பணிகளையும் ஆரம்பித்துள்ளனர்

தற்போது 2 வீடுகள் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்திற்கு தேவையான முழு செலவையும் சூர்யா-கார்த்தி ரசிகர்களே ஏற்கபதாக தெரிவித்துள்ளனர். இவர்களது செயல் தற்போது அனைவராலும் பாராட்டபட்டு வருகிறது.

-விளம்பரம்-
Advertisement