‘சூர்யாவை சந்தித்த சந்துரு’ – பல ஆண்டுகள் கழித்து மீட் செய்த விஜய் மற்றும் சூர்யா.

0
306
vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் விஜய், சூர்யா. தற்போது இவர்கள் இருவரும் படங்களில் மும்முரமாக நடித்து கொண்டு இருக்கிறார்கள். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் என்ற படத்தில் மும்முரமாக நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், யோகிபாபு, பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு கிளைமாக்ஸ் ஜார்ஜியாவில் முடிந்து தற்போது சென்னையில் நடைபெற்று இருப்பதாகவும், ஷாப்பிங் மாலில் சில காட்சிகள் எடுக்கப்படுவதாகவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள சன் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. அதே போல் சன் ஸ்டுடியோவில் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதையும் பாருங்க :தான் பல முறை கற்பழிக்கப்பட்டாதாக முகநூல் பக்கத்தில் வெளியிடபட்ட செய்தி’ – சின்மயி அளித்த ஆவேச பதில்.

- Advertisement -

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இமான் இசை அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் சத்யராஜ், பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சூரி உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் படப்பிடிப்பு இடைவேளையில் விஜய்– சூர்யா இருவரும் சந்தித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

சூர்யா– விஜய் இருவருமே திரை உலகில் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரின் படங்களையும் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. மேலும், எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் விஜய், சூர்யா இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் விஜய் தமிழன் படத்தில் ‘சூர்யா’ என்ற வழக்கறிஞ்சராக நடித்து இருந்தார். அதே போல விஜய்யுடன் சூர்யா நடித்த ‘பிரண்டஸ்’ படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் பெயரும் சந்துரு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement