தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா அவர்கள் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை சூர்யா வேட்டையாடும் சூரசம்ஹாரம் தான் எதற்கும் துணிந்தவன். இப்படம் சமீபத்தில் தான் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் செம மாஸ் கமர்சியல் படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமன்றி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதோடு இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது.
இதையும் பாருங்க : இரு ரூபாய்க்கு கூட பேரம் பேசுறாங்க – சைக்கிளில் வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றி வரும் நான் கடவுள் பட நடிகர்.
சூர்யா – பாலா கூட்டணியில் உருவான படம்:
இதனை தொடர்ந்து சூர்யா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சூர்யா – பாலா கூட்டணியில் படம் ஒன்று உருவாகி வருகிறது. மேலும், இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏற்கனவே பாலா இயக்கத்தில் சூர்யா அவர்கள் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்திருந்தார். நந்தா திரைப்படம் சூர்யாவின் திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்து இருந்தது. அதே போல் கடைசியாக பாலா அவர்கள் ஜோதிகாவை வைத்து நாச்சியார் என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா– பாலா கூட்டணி:
பின் 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா– பாலா இணைந்து படத்தில் பணியாற்றி வருவது ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை அளித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் சூர்யாவின் 41வது திரைப்படம் ஆகும். மேலும், இந்த படத்திற்காக மதுரையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமில்லாமல் சூர்யாவுடன் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, மமிதா பைஜூ உட்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் பூஜை கன்னியாகுமரி மாவட்டத்தில் போடப்பட்டது. அப்படியே படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்தது.
பாலா – சூர்யா இடையே பிரச்சனை:
கன்னியாகுமரி, ராமேஸ்வரம் பகுதிகளில் படப்பிடிப்பு மும்முரமாக நடந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதில் சூர்யா கோபத்துடன் படப்பிடிப்பை விட்டு வெளியேறியதாகவும் செய்திகள் வெளியாகின. அதோடு இயக்குனர் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடித்ததால் தான் இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் சோசியல் மீடியாவில் வதந்திகள் கிளம்பி இருக்கிறது.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ;
இதையடுத்து சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் ட்விட்டர் ஒன்று போட்டுஇருந்தது.அதில், இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் 34 நாட்கள் வெற்றிகரமாக முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெற இருக்கிறது. அதுவும் கோவாவில் இந்த படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதற்கான செட் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்தவுடன் ஜூன் மாதத்தில் கோவாவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது என்று பதிவிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பாலாவின் பிறந்தநாளான இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு வணங்கான் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.