ரசிகன் கொடுத்த பரிசு.! பொது நிகழ்ச்சியில் நிரூபித்த சூர்யா ! மகிழ்ச்சியில் ரசிகர்கள் ! புகைப்படம் உள்ளே !

0
699

தமிழ் சினிமாவை தாண்டி தான்னுடைய தனிப்பட்ட வாழ்விலும் நல்ல பெயருடன் திகழ்ந்து வருபவர் பழம் பெரும் நடிகர் சிவகுமார். அவரை போலவே அவரது மகன் நடிகர் சூர்யாவும் சினிமாவில் இது வரை எந்த ஓரு கிசு கிசுகளும் பெறாத ஓரு சிறந்த நடிகர்.சினிமாவை தாண்டி நடிகர் சூர்யா, என்னேற்ற பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.

surya

- Advertisement -

தான் நடத்தி வரும் அகரம் நிறுவனம் மூலம் என்னேற்ற ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக பல நல்ல உதவிகளையும் பல ஏழை எளிய மக்களுக்கு பல கல்வி சம்மந்தபட்ட உதவிகளை செய்து வருகிறார்.தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழி மாநிலங்களிலும் ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ள நடிகர் சூர்யா சில நாட்களுக்கு முன்னர் ஆந்திராவில் காரில் சென்று கொண்டிருக்கும் போது, ரசிகர்கள் சிலர் இரு சக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்த போது, அவர்களை நிறுத்தி ஹெல்மெட் அணியாமல் எதிர்க்கு இப்படி என்னை பின் தொடர்ந்து வருகிறீர்கள், உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் என்னாவது என்று அவர்களை கண்டித்த வீடியோ ஒன்று மிகப்பெரிய வைரல் ஆனது.

இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ரசிகர்கள் மீதுள்ள அன்பை நிரூபிக்கும் விதமாக மற்றுமொரு செயலை செய்துள்ளார். சமீபத்தில் நடிகர் சூர்யாவிற்கு அவரது ரசிகர் ஒருவர் சட்டைஒன்றை பரிசளித்துள்ளார்.

-விளம்பரம்-

actor surya

அந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவோடத்தோடு மட்டும் அல்லாமல் தனது ரசிகர் அளித்த அந்த ஆடையை சமீபத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சிக்கு அணிந்து சென்றுள்ளார் நடிகர் சூர்யா. இதனை பார்த்த அவருடைய ரசிகர்கள் சூர்யா செய்த இந்த செயலை கண்டு நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement