அயன் படத்தின் பாடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை அச்சு அசலாக ரீ – கிரியேட் செய்த சிறுவர்கள் – சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி.

0
5920
- Advertisement -
  • அயன் படத்தி, இடம்பெற்றிருக்கும் சண்டைக் காட்சியை தத்ரூபமாக  ரீமேக் செய்த ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறார். தமிழில் முன்னணி நாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. இவர் கே வி ஆனந்த் இயக்கத்தில் அயன், மாற்றான் என்று இரண்டு படங்களில் நடித்துள்ளார். இதில் அயன் திரைப்படம் தான் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து இருந்தது. இந்த படத்தில் இடம் பெற்ற சண்டை காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் கடந்த ஜூலை 23-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சூர்யாவின் ரசிகர்கள் அயன் திரைப்படத்தின் சண்டைக் காட்சியை அதே போல ரீமேக் செய்து உருவாக்கி இருந்தனர். முறையான பயிற்சி ஏதுமின்றி யூ-ட்யூப் பார்த்து கற்றுக் கொண்டு, செல்ஃபோனில் வீடியோ எடுத்து, இந்தப் பாடலை அவர்கள் மறு உருவாக்கம் செய்துள்ளனர்.

இதையும் பாருங்க : மாடல் அழகு ரேஞ்சுக்கு படு கிளாமரான பிகினி உடையில் நடிகை ரெஜீனா கொடுத்த போஸ்.

-விளம்பரம்-

பலரது வரவேற்பை பெற்றதோடு, ரசிகர்களிடம் பாராட்டுகளையும் பெற்றது. இதே போல ஐயன் படத்தின் முதல் பாடலையும் அச்சு அசலாக அப்படியே ரீ – கிரியேட் செய்துள்ளனர். இவர்களின் இந்த வீடியோக்கள் எல்லாம் ரசிகர்களின் கவனத்தை பெற்றதோடு மட்டும் இல்லாமல் சூர்யாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை கண்டுள்ள சூர்யா, இது மிகவும் பிடித்து இருக்கிறது, மிக அருமை. பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அதே போல இந்த வீடியோவை செய்துள்ள இளைஞர்களை பாராட்டி ஆடியோ ஒன்றையும் அனுப்பியுள்ளாராம் சூர்யா. அந்த ஆடியோவில் பல ஆண்டுகளுக்கு முன்பு உருவான படத்தின் சண்டைக் காட்சியை வெற்றிகரமாக அதே போல தத்ரூபமாக உருவாக்கி இருப்பதாகவும், இதை தான் மிகவும் ரசித்த தாகவும் சூர்யா  அந்த ஆடியோவில் கூறியுள்ளாராம்.

Advertisement