தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா. சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த காப்பான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “சூரரைப் போற்று”. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

மேலும், இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். இதையடுத்து சூர்யா அவர்கள் ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ராஷி கன்னா நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் நடிகர் சூர்யாவின் எமோஷனல் ஆடியோ மெசேஜ் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில் அவர் தனது ரசிகர்கள் கொரோனா வைரஸ் நேரத்தில் செய்த உதவிகள் குறித்து எமோஷனல் ஆக பேசியுள்ளார். அதில் அவர் கூறியது, இந்த இக்கட்டான சூழலில் தொடர்ந்து உதவிகள் செய்வது சாதாரண விஷயமல்ல. இதை யாருக்கும் நிரூபிக்க பண்ணவில்லை. இதை ஒரு மன நிறைவுக்காக தான் செய்கிறோம். தொடர்ந்து உதவிகள் பண்ணுங்கள்.
https://twitter.com/SuriyaFansClub/status/1269984488500523008
அதோடு உங்களை வருத்திக்காமல் செய்யுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். கொரோனாவால் யார் நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார்களோ அவர்களுக்கு நீங்கள் செய்யும் இந்த உதவிகள் போய் சேர்கிறதா என சரி பார்த்து கொள்ளுங்கள். முடிந்தவரை ப்ளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். தொடர்ந்து இப்படி நீங்கள் உதவிகள் செய்வது பெரிய விஷயம். என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறினார்.





