படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவிற்கு தலையில் அடிபட்டு இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.
இந்த படத்தை சூர்யாவின் 2D மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் தான் இணைத்து தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன் ஜெயம் ராம் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இன்னும் படத்திற்கு பெயர் வைக்கவில்லை.
சூர்யா 44 படம் :
இந்தப் படத்தினுடைய படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தான் அந்தமானில் தொடங்கப்பட்டது. படத்தினுடைய வேலைகளும் மும்முரமாக நடைபெற்று இருக்கும் நிலையில் நடிகர் சூர்யாவிற்கு தலையில் அடிபட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது, இந்த படத்தினுடைய இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூலை 26 ஆம் தேதி முதல் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இங்கு சண்டைக்காட்சிகள் எடுத்து இருக்கிறார்கள்.
படப்பிடிப்பில் சூர்யாவிற்கு நடந்தது :
அப்போது எதிர்பாராத விதமாக நடிகர் சூர்யாவுக்கு தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி அவருக்கு சிகிச்சை அளித்து இருக்கிறது படக்குழு. சில நாட்கள் சூர்யா ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரையும் கூறி இருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சூர்யாவுக்கு என்னாச்சு? நன்றாக இருக்கிறாரா? என்று ஆதங்கத்திலும், வருத்தத்திலும் கேட்டு வருகிறார்கள்.
கங்குவா படம்:
தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கங்குவா’. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க 3Dயில் உருவாக்கப்பட்டு வருகிறது.
சூர்யா நடிக்கும் படம் :
அதுமட்டுமில்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. வருகிற அக்டோபர் 10-ஆம் தேதி இந்த படம் திரையரங்களில் வெளியாக இருப்பதால் படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ‘ஆதி நெருப்பே பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இதை அடுத்து இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.