சூர்யா ரசிகர்களுக்கு ஜாக்பாட் – அதிரடியாக தயாராகிவரும் “கங்குவா” படத்தின் புதிய அப்டேட்.

0
1884
- Advertisement -

சூரியா தற்போது நடித்துவரும் கங்குவா படம் குறித்த அப்டேட் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது.இதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற தோற்றத்தில் நடித்து இருந்தார். அதேபோல் மாதவனின் ராக்கெட்டரி தி நம்பி விளைவு என்ற படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இப்படி இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

மேலும் சூர்யாவின் 24 வது படமான சூரரைப் போற்று 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை வென்று குவித்துள்ளது. இதனால் பலரும் சூர்யாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள். தற்போது சூர்யாவிற்கு அவர்கள் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். முதன் முறையாக சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு சூர்யா 42 என்று பெயர் இடப்பட்டது. இந்த படத்தை யூவி கிரியேஷன் நிறுவனமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.

படம் குறித்த தகவல்:

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் 3டில் உருவாக இருப்பதாக படக்குழு கூறி இருக்கின்றனர். இந்த படம் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் வகையில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

அதோடு இப்படத்திற்கு சமீபத்தில் தான் படத்தின் பெயரும் “கங்குவா” என்று வெளியிடடப்பட்டது. இந்நிலையில் தான் சூர்யா ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுக்கும் படியாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது தற்போது இத படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறதாம். மேலும் இதனை படப்பிடிப்பானது அடுத்த 20 நாட்களுக்கு இங்கே நடக்கும் என்று கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட நிலையில் தான் சூர்யாவின் பிறந்தநாள் வரும் 23ஆம் தேதி என்பதினால் அப்போது ரசிகர்களுக்கு சுப்ரைஸ் கொடுக்கும் படியாக ப்ரோமோ வெளியாகும் என்று கூறப்படுகிறது.இது ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஒரு நற்ச்செய்தியாகும். மேலும் இந்த படம் 3D மற்றும் 2D தொழில் நுட்பத்தில் வெளியாகும் என்று கூறப்படுவதினால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement