நீட் தேர்வு விவகாரத்தில் கருத்து தெரிவித்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் சூர்யாவை செருப்பால் அடித்தால் 1 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நீட் தேர்வு பயத்தால் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மாணவி அனிதா துவங்கி பல்வேறு மாணவர்கள் நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதை ஆகி வருகிறது.
கடந்த சில திங்களுக்கு முன்னர் கூட அரியலூரில் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் மருத்துவக் கல்விக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வாக இருக்கும் நீட் தேர்வு நடக்கவிருந்த ஒரு நாளைக்கு முன்பாக நீட் தேர்வு மீதான அச்சத்தின் காரணமாக ஜோதி தற்கொலை செய்து கொண்டார்.இப்படி ஒரு நிலையில் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களை சம்பவம் குறித்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் ‘ கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது’ என்றும் கூறி இருந்தார். சூர்யாவின் இந்த கருத்தால் இந்தப் பிரச்சினையை தீவிரமாக முன்னெடுக்கும், பாஜக, இந்து மக்கள் கட்சியினர் தொடர்ந்து நடிகர் சூர்யாவை விமர்சித்து வருகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் தர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் என்ற பெயரில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துள்ள்ளார், நீட் விவகாரத்தில் சூர்யா நீதிமன்றத்தை அவமதித்து பேசியுள்ளார். ம் நடிகர் சூர்யாவை யாராவது செருப்பால் அடித்தால் அவர்களுக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் சர்சைக்குறிய வகையில் பேசியுள்ளார்.