நட்பிற்காக 11 வருடம் கழித்து ரீ-என்ட்ரி கொடுக்கும் விஜயகாந்த். யார் படத்தில் தெரியுமா ?

0
578
vijayakanth
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் கேப்டன் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். மேலும், ரஜினி, கமல் காலத்தில் அவர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்தவர் விஜய்காந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய பல படங்கள் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.

-விளம்பரம்-

இவர் கடைசியாக 2010ஆம் ஆண்டு வெளியான விருதகிரி என்ற படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார்.

- Advertisement -

அது மட்டுமில்லாமல் சமீபகாலமாக அவருக்கு உடல் பிரச்சனைகள் அதிகமாக இருந்ததால் அவரால் படங்களில் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் விஜயகாந்த் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் நடிகரும் இசையமைப்பாளராகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய படத்தின் மூலம் தான் விஜயகாந்த் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். தற்போது விஜய் ஆண்டனி விஜய்மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

vijayakanth-sarathkumar

இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான சலீம் படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜயகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை Infinity film ventures தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் சரத்குமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இப்படத்தில் விஜயகாந்த் நடிக்கப் போகிற என்ற தகவல் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. விஜயகாந்துக்கு சரத்குமார் நெருங்கிய நண்பர் என்பதால் தான் இந்த படத்தில் விஜயகாந்த் ஒப்புக் கொண்டிருக்கலாம் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதே போல் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் விஜயகாந்த்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement