சூர்யாவிற்கு முன்பாக காக்க காக்க கதையை இந்த இரண்டு ஹீரோக்களிடன் சொல்ல சொன்னார் ஜோதிகா – கௌதம் மேனன்.

0
1479
kakka
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டு இருக்கிறார்நடிகர் சூர்யா. சமீபத்தில் நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில் வெளிவந்த காப்பான் படம் மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. மேலும், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் சூர்யாவின் திரை பயணத்தில் மைல்கல்லாக அமைந்த படம் காக்க காக்க. இந்த படம் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது.

-விளம்பரம்-
MAKING OF KAAKHA KAAKHA figth (Tamil) - YouTube

இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன், ரம்யா கிருஷ்ணன், டேனியல் பாலாஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சூர்யா அவர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் வேற லெவல் தூள் கிளப்பி இருப்பார். இந்த படத்திற்கு முதலில் “பின்குறிப்பு” என்று தலைப்பு வைத்தர்கள். பின்குறிப்பு தலைப்புடன் போஸ்டரும் சோசியல் மீடியாவில் வெளிவந்தது. பின் சில காரணங்களால் அந்த படத்தின் தலைப்பு காக்க காக்க என்று மாற்றப்பட்டது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் காக்க காக்க படத்தின் சில சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன். அதில் பேசிய கௌதம் மேனன், நான் முதலில் இந்த கதையில் ஜோதிகாவிற்காக எழுதிவிட்டு நான் அவரிடம் இதைப் பற்றி பலமுறை சொன்னேன். அவர் தான் இந்த கதையில் அஜித் மற்றும் விக்ரம் ஆகிய யாராவது நடிக்கலாம் என்று என்னை அனுப்பி வைத்தார். ஆனால், சில பல காரணங்களால் அவர்களால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அதன் பின்னர் ஜோதிகா என்னிடம் அந்த படத்தை பார்க்க சொன்னார். அந்த படத்தை பார்த்துவிட்டு சூர்யாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதன்பின்னர்தான் சூர்யா இந்த படத்தில் நடிக்க வந்தார் என்று கூறிய கௌதம் மேனன் இந்த படத்திற்கு சூர்யா எடுத்த ரிஸ்க் ஒன்றைப் பற்றியும் கூறி இருக்கிறார்.


இந்த படத்தின் ஒரு காட்சியில் சூர்யாவின் கண்கள் சிவப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக அவர் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருந்தார். மேலும் அடிக்கடி தலைகீழாக நின்று தனது கண்கள் ரத்த நிறத்தில் இருப்பதற்காக ரிஸ்க் எடுத்தார். ஒருமுறை 6:00 மணிக்கு படப்பிடிப்பிற்காக நாங்கள் அனைவரும் தயாராக இருந்தபோது திடீரென்று சூர்யா மயங்கி விழுந்து விட்டார். நாங்கள் உடனே ஓடிச்சென்று அவரை தூக்கினோம். அந்த நாள் சூட்டிங்கை கூட கேன்சல் செய்து விட்டோம் என்று கூறியுள்ளார் கௌதம் மேனன்

-விளம்பரம்-
Advertisement