விஜய்யின் அம்மா ஷோபா மற்றும் தந்தை சந்திரசேகருடன் சூர்யா எடுத்துக்கொண்ட செல்பி.!

0
948
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் என்ற படத்திலும் கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்துள்ள என் ஜி கே படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

இந்த நிலையில் நடிகர் சூர்யா விஜய்யின் அம்மா ஷோபா மற்றும் அவரது தந்தை சந்திரசேகரன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் படு வைரளாக பரவி வருகிறது. நடிகர் சூர்யாவும் நடிகர் விஜயும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து நேருக்கு நேர் , பிரண்ட்ஸ் உள்ளிட்டபடங்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

மேலும், இவர்கள் இருவரது குடும்பமும் ஒரு நல்ல நட்பில் இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளனர். அந்த நிகழ்ச்சிக்கு நடிகர் சூர்யாவும் வந்துள்ளார் பின்னர் அவர்களுடன் சென்று நடிகர் சூர்யா செல்பி புகைப்படத்தை எடுத்துக்கொண்டார்.

விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய ‘பெரிய அண்ணா’ படத்தில் நடிகர் சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல நடிகர் சூர்யா மற்றும் விஜய் தற்போது ஒரு நல்ல நண்பர்களாகஇருந்து வருகின்றனர். சூர்யா நடத்திவரும் அகரம் அறக்கட்டளை நிறுவனத்தின் ஒரு விளம்பர படத்திற்கு சூர்யா, விஜய் அழைத்தபோது சற்றும் யோசிக்காமல் விஜய் சம்பளம் இல்லாமல் அந்த விளம்பரத்தில் நடித்து கொடுத்தார் என்று சூர்யா ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement