அப்போது அப்பா இப்போ மகனா.! இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் செல்ஃபி வீடியோ.!

0
579

தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகுமார். சினிமாவில் இவர் நடிப்பதை நிறுத்திவிட்டாலும் இவரை தனிப்பட்ட முறையில் பல பேர் பின்தொடர்கின்றனர் என்றால் அதற்கு காரணம், அந்த அளவிற்கு சிவகுமார் ஒழுக்கமானவர்.

ஆனால், சமீபத்தில் இவரது பெயர் படு டேமேஜ் ஆகியது. அதற்கு முக்கிய காரணமே தன்னிடம் செல்பி எடுக்க வரும் நபர்களின் செல்போன்களை பல முறை சிவகுமார் தட்டிவிட்டார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது சூர்யாவின் செல்ஃபி வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் NGK பட ப்ரோமோஷனுக்கா ஆந்திரா சென்றிருந்தார் சூர்யா. அப்போது அவர் மேடையில் பேசிய போது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க மேடையில் ஓடி சென்றார்.

அப்போது அந்த நபரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் சூர்யாவிடம் எப்படியாவது செல்ஃபி எடுக்க முயன்றார் அந்த ரசிகர். ஆனால், பதட்டத்தில் அவரால் செல்பி எடுக்க முடியாமல் இருக்க, சூர்யாவே போனை வாங்கி செல்பி எடுத்தார்.

-விளம்பரம்-
Advertisement