வாரிசு நடிகர்கள் தொடர்பாக தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு விஜய் சேதுபதி மகன் சூர்யா கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான மனிதர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடைசியாக இவர் நடித்து வெளியான ‘மகாராஜா’ படம் பட்டி தொட்டியெங்கும் ஹிட். இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி பல படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை கடந்த ஏழு சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார். தற்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இப்படி இருக்கும்போது விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் தற்போது சினிமாவில் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார். இவர் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய அப்பாவின் பல படங்களில் நடித்து இருந்தார்.
சூர்யா குறித்த தகவல்:
சூர்யா முதன் முதலில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்தார். அதனை அடுத்து இவர் சிந்துபாத் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடுதலை 2 படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இவர் தனியாக ஹீரோவாக நடித்து இருக்கிறார். இவர் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘Pheonix வீழான்’ என்ற ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

சூர்யா ஹீரோவாக நடித்த படம்:
இந்த படத்திற்கு சாம்.சி எஸ் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தின் பூஜையின் போது விஜய் சேதுபதி மகன் சூர்யா, அப்பா வேற, நான் வேற. அதனால் தான் டைட்டிலில் கூட சூர்யா என்று வைத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசி இருந்தது சர்ச்சையாகி இருக்கிறது. பின் இந்த படத்தினுடைய டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி கலந்து இருந்தார். அப்போது பேட்டியில் சூர்யாவிடம், உங்க அப்பா சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார் ஏன்? என்று கேட்க, அதற்கு சூர்யா, தந்தையர் தினத்திற்கு அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பினேன்.

சூர்யா சேதுபதி பேட்டி:
அப்பா மட்டும் இல்லை, அம்மா, தங்கச்சி எல்லோருமே வந்து இருக்கிறார்கள். அன்று நான் மேடையில் இருக்கும் போது பதட்டத்தில் இருந்தேன் என்று கூறியிருந்தார். தற்போது இந்த படத்தின் சூட்டிங் முடிந்து, ப்ரோமோஷன் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்திற்காக சமீபத்தில் அளித்த பேட்டியில், Nepotism தொடர்பாக தொகுப்பாளர் கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு சூர்யா சேதுபதி, Nepotism என்பது ஒரு சான்ஸ் தான். எல்லா முறையுமே வாய்ப்பு கிடைக்காது.
https://www.youtube.com/watch?v=5bvJAsnXiQo
Nepotism குறித்த பதிலடி:
கிடைத்த வாய்ப்பை வைத்து பயன்படுத்தி கொண்டால் முன்னேறிவிடலாம். அப்படி இல்லை என்றால் கடைசி வரையும் கிடைக்காது. ஒரு டாக்டர் பையன் டாக்டராகலாம். வக்கீல் பையன் வக்கீல் ஆகலாம். டீச்சர் பையன் டீச்சர் ஆகலாம். ஆனால், நடிகரோட பையன் நடிகராக கூடாதா? அப்படி ஆனால் Nepotism என்று சொல்வீர்களா? வாய்ப்பு என்பதை விட கடின உழைப்பு என்பது ரொம்ப முக்கியம். அந்த உழைப்பு இருந்தால் தான் அந்த இடத்தை தக்க வைக்க முடியும். வாய்ப்பு கிடைத்தால் மட்டும் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாது என்று கூறி இருக்கிறார்.






