பான் இந்தியா திரைப்படத்தில் இணைந்த சூர்யா கார்த்தியின் சகோதரி – குவியும் வாழ்த்துக்கள்.

0
483
Surya
- Advertisement -

பான் இந்தியா திரைப்படத்தில் சூர்யாவின் தங்கை பிருந்தா இணைந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் 80 காலகட்டம் துவங்கி இன்று வரை பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிவகுமார். இவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவரது மகன்கள் தான் சூர்யா, கார்த்தி. இவர்கள் இருவரும் தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சூர்யா, கார்த்திக் இவர்கள் இருவரின் நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. தன் தந்தையை போலவே இவர்கள் இருவரும் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்து வருகிறார்கள்.

- Advertisement -

சூர்யா திரைப்பயணம்:

அந்த வகையில் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. பின் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து சூர்யா அவர்கள் வாடிவாசல், வணங்கான், சூர்யா 42 போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், சூர்யா நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அதேபோல் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து இருந்த சுல்தான் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

கார்த்தி திரைப்பயணம்:

இதைத்தொடர்ந்து தற்போது கார்த்திக் நடிப்பில் விருமன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் இயக்குனர் சங்கர் மகள் அதிதி நடித்து இருக்கிறார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் பெற்று இருக்கிறது. இதை தொடர்ந்து கார்த்தி அவர்கள் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதன் பின் சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படி சிவகுமாரின் இரண்டு மகன்களும் கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சிவகுமார் மகள் பிருந்தா:

அதோடு சிவகுமாருக்கு மகன்கள் மட்டும் இல்லை பிருந்தா என்ற ஒரு மகளும் இருக்கிறார். சூர்யா, கார்த்திக் இருவருக்கும் தங்கை தான் பிருந்தா. சிவகுமார் தன் மகளை சினிமாத்துறைக்கு கொண்டு வரவில்லை. பிருந்தா படிப்பு, குடும்பம் என்று செட்டில் ஆகிவிட்டார். பின் இவரும் சமீப காலமாக சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். இவர் ஒரு படத்திற்கு பாடல் பாடியிருந்தார். இந்நிலையில் இவர் பான் இந்தியா படத்தில் களமிறங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் பிருந்தா பதிவு:

அதாவது, பாலிவுட்டில் பிரம்மாண்டமாக சமீபத்தில் வெளியாகி இருந்த படம் பிரம்மாஸ்டரா. இந்த படம் ஆலியா பட்- ரன்பீர் நடிப்பில் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், மௌனி ராய், நாகர்ஜுனா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் கரன் ஜோகர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

பிருந்தாவுக்கு குவியும் பாராட்டு:

தற்போது இந்த படத்தின் தமிழ் வர்சனில் நடிகை ஆலியா பட்டுக்கு பிருந்தா தான் டப்பிங் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் இதுகுறித்து சமூக வலைதள பக்கத்தில் பிருந்தா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். இதை பார்த்த அவருடைய சகோதரர்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், பிரபலங்கள், நெட்டிசன்கள் பலரும் பிருந்தாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement