தேசிய அளவிளான போட்டியில் வெற்றி பெற்ற சூர்யா மகன்.! என்ன போட்டி தெரியுமா.!

0
3324
Surya-Son-Dev
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் பிள்ளைகள் பல்வேறு விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய் மகள் திவ்யா சாஷா மற்றும் அஜித்தின் மகள் அனுஷ்கா ஆகிய இருவருமே பேட்மிண்டனில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக திகழ்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Image result for surya son

இந்நிலையில் சூர்யாவின் மகனும் விளையாட்டில் சிறந்து விளங்கி வருகிறார். சூர்யா மற்றும் ஜோதிகா கடந்த 2006 ஆம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் பிறந்தனர்.

- Advertisement -

குடும்பமே சினிமாவில் இருந்து வந்தாலும் இதுவரை தியா மற்றும் தேவ் இருவரும் சினிமாவில் முகம் காட்டியதில்லை. இதில் தியா டென்னிஸ், கால்பந்து விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வரும் தியா, கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். 

தனது சகோதரியை போல படிப்பை தாண்டி தேவ், கராத்தே கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். தேசிய அளவிலான ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்து கொண்ட சூர்யாவின் மகன் தேவ் வெற்றி பெற்றுள்ளார். 40 பேர் இந்த போட்டியில் கலந்துகொண்டஇந்த போட்டியில் பல்வேறு பிரிவுகளை கடந்து தேவ் வெற்றி பெற்றுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement