தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா அவர்களின் படங்கள் சமீப காலமாகவே தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டு தான் உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் வருத்தம் ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “சூரரைப் போற்று”. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் சிக்கியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளனர்.
இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். சமீபத்தில் சூரரைப் போற்று படத்தின் முதல் பாடல் வெளியானது. மேலும், இந்த படம் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என பயங்கரமாக பல வேலைகளை செய்து வருகிறார் நடிகர் சூர்யா. இந்த படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக ப்ரோமோஷன் வேலைக்கு சூர்யா செலவு செய்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாடல் ஸ்பைஸ் ஜெட் போயிங் 737 விமானத்தில் வெளியிட்டு உள்ளார்கள். இந்த விமானம் இந்த படத்திற்காகவே வடிவமைக்கப்பட்டது. இந்த விமானத்தில் அகரம் அறக்கட்டளையில் படிக்கும் 100 குழந்தைகள் உடன் சூர்யா பயணித்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி இருந்தது.
இதையும் பாருங்க : இரண்டாவது கணவரோடு காதலர் தினத்தை கொண்டாடிய ரஜினி மகள். இன்னொரு ஸ்பெஷல் என்ன தெரியமா ?
எப்போதுமே நடிகர் சூர்யா பல மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இருந்தாலும் சூரரைப்போற்று படத்திற்கு மிகப் பெரிய விளம்பரம் தேவைப்படுகிறது. ஏனென்றால் ஏனென்றால் சூரரைப்போற்று திரைப்படம் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்துடன் மோத உள்ளது. அதே போல் கடந்த ஆண்டு பிகில் படத்துடன் கைதி படம் மோதி வெற்றி பெற்று இருந்தாலும் பிகில் படத்தின் வசூல் கைதி படத்தை விட இரண்டு மடங்கு அதிகம். அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பதால் படம் கண்டிப்பாக ஹிட்டாகும். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
அதனால் சூர்யா அவர்கள் தன்னுடைய சூரரைப்போற்று படத்தை எப்படியாவது ஹிட் செய்து விட வேண்டும் என ப்ரோமோஷன்களில் அதிக கவனமும், செலவையும் செய்து வருகிறார். என்ன தான் நடிகர் சூர்யா அவர்கள் அதிக செலவு பண்ணி விளம்பரம் செய்தாலும், விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு அரசியல்வாதிகளே புரமோஷன் செய்து விட்டார்கள். மாஸ்டர் படத்தின் அப்டேட்கள் வருவதற்கு முன்பு அதிகமாக சூரரைப்போற்று படத்தை தான் சோசியல் மீடியாவில் பேசிக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள். ஆனால், மாஸ்டர் படத்தின் அப்டேட் வந்த தொடங்கியவுடன் சூரரைப்போற்று படத்தின் அப்டேட் குறித்து எந்த ஒரு பேச்சும் மூச்சும் இல்லாமல் உள்ளது.
மேலும், சூரரைப்போற்று படம் வெளிவந்த பிறகு தான் சூர்யாவின் இவ்வளவு முயற்சிகளுக்கு பலன் என்னவென்று தெரியும். அது மட்டுமில்லாமல் நடிகர் சூர்யா ஹரி படத்தில் கூட கவனம் செலுத்தாமல் சூரரைப்போற்று படத்திற்கு பிரமோஷன் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ஒரு காலத்தில் விஜய், அஜித் படங்களை முந்திக்கொண்டு பெயர் பெற்றது சூர்யாவின் படங்கள். அதே போல் மீண்டும் சூர்யா வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். சூரரைப்போற்று படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.