தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை கொண்டுவர தொலை காட்சிகள் அனைத்தும் மூலமாக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது அந்த வகையில் தற்போது தொலைக்காட்சி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து வருவது ஜீ தமிழ் தொலைக்காட்சி தான் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்றுள்ளது.
அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இன்றைய தேதியில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது, ‘யாரடி நீ மோகினி’ சீரியல் தான். சன் தொலைக்காட்சியில் ஒளிப்பிரான நந்தினி சீரியலுக்கு பிறகு தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் அதிக பட்ஜெட்டை கொண்டு உருவான சீரியல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் சஞ்சீவ் ஹீரோவாக நடிக்க, வில்லிகளாக பாத்திமா பாபு, சைத்ரா ரெட்டி இருவரும் நடித்தன.
இதையும் பாருங்க : அரை குறை ஆடையில் நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட நஸ்ரியா – ரசிகர்களை குளிர வைத்த புகைப்படம்.
ஆரம்பத்தில் இந்த சீரியலில் சஞ்சீவ் நடித்து வந்தார். அதன் பின்னர் அவர் நீக்கப்பட்டு தற்போது பிரபல சீரியல் நடிகரான ஸ்ரீகணேஷ் நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது 1000 எபிசோடுகளை கடந்து உள்ளது. ஆனால், சமீப காலமாக இந்த சீரியலை ஜவ்வாக இழுத்து வருகின்றனர். இதனால் விரைவில் இந்த சீரியலை முடித்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.
இப்படி ஒரு நிலையில் இந்த சீரியல் விரைவில் நிறைவடைய இருக்கிறது. சீரியல் நிறைவடைய இருக்கும் நிலையில் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக சீரியலின் கிளைமாக்ஸ்சை ரசிகர்களே முடிவு செய்யும் வாய்ப்பை கொடுத்துள்ளனர். இந்த தொடருக்கு 3 கிளைமாக்ஸ்ஸை கொடுத்து அதில் இருந்து ரசிகர்களை தேர்வு செய்ய சொல்லி இருக்கின்றனர்.