கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு மீண்டும் சூர்யா-ஞானவேல் ராஜா கூட்டணி இணைய இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த படம் கங்குவா.
இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
கங்குவா படம்:
அதோடு இந்த படம் குறித்து நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை சொல்லி இருந்தார்கள். குறிப்பாக, இந்த படத்தில் நிறைய சத்தம் தான் கேட்கிறது என்று எல்லாம் ட்ரோல் செய்து இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் கங்குவா படத்தை விமர்சிப்பதை விட சூர்யாவை தனிப்பட்ட முறையில் விமர்சித்து இருந்தார்கள். இதற்கு பிரபலங்கள் பலரும் ஆதரவாக பதிவு போட்டு இருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்ததாக கூறப்படுகிறது.
படம் குறித்த தகவல்:
அது மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இதனை சரி செய்யும் விதமாக மீண்டும் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதனுடைய இயக்குனர் யார் என்று இன்னும் தெரியவில்லை. இந்த முறை அந்த நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் சரியான கதையை தேர்வு செய்யும் நோக்கில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கின்றது.
சூர்யா-ஞானவேல் ராஜா கூட்டணி:
அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே ஞானவேல் ராஜா கஷ்டத்தில் இருக்கிறார் என்று தான் கங்குவா படத்தில் நடிக்க சூர்யா ஒத்து கொண்டு இருந்தாராம். ஆனால், அந்த படம் தோல்வியடைந்ததால் மீண்டும் நடிப்பதற்காக சூர்யா ஒத்துக் கொண்டிருக்கிறார். தற்போது சூர்யா நடித்திருக்கும் படங்கள் முடிந்தவுடன் இவர்களுடைய கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
கங்குவா கதைக்களம்:
படத்தில் 1070 மற்றும் 2024 என்று வெவ்வேறு காலகட்டத்தில் கதை நகர்கிறது. அதில் பெருமாச்சி தீவின் நாயகனாக வலம் வருபவர் கங்குவா. கங்குவாவுக்கும் அவருடைய குழுவுக்கும் போர் செய்வது தான் குலத்தொழில். வீரமும் இயற்கை விளைந்த இந்த மண்ணை தன்னுடைய வசம் படுத்த ரோமானிய அரசு நினைக்கிறது. அதற்கு பிறகு என்ன ஆனது? உதிரா பெருமாச்சி மீது போர் தொடுக்க காரணம் என்ன? அப்பாவை கொன்ற கங்குவாவை கொள்ள துடிக்கும் கொடுவாவின் பகை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.