28 ஆண்டுக்கு முன் நடந்த உண்மைக் கதை – நெஞ்சை பதற வைக்கும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் கொடூரமான உண்மை பின்னணி.

0
2852
Jai Bhim
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது சூர்யா நடித்து உள்ள படம் ஜெய் பீம். இந்த படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார்.இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். பழங்குடியின பெண்ணின் பிரச்சனைக்காக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் நவம்பர் வெளியாக உள்ளது.

-விளம்பரம்-

மேலும், சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. ஜெய்பீம் படத்தின் ட்ரைலர் தான் தற்போது சோஷியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெய் பீம் படம் ஒரு உண்மைச் சம்பவக் கதை என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதற்கான வீடியோவும் வெளியாகியுள்ளது. பழங்குடியினர் உரிமைகளைப் பற்றிப் பேசும் பல படங்கள் வந்திருக்கு. அப்படி வெளியான படங்கள் எல்லாமே காடுகளில் வாழும் பழங்குடியினர் பத்தி தான் இருந்தது. ஆனால், முதல் முதலாக சமவெளியில் வாழ்ந்த பழங்குடியினர் பற்றி பேசின படமாக ஜெய் பீம் படம் அமைந்திருக்கிறது.

இதையும் பாருங்க : ‘என்னங்க சார் உங்க சட்டம்’ – முழு விமர்சனம் இதோ.

- Advertisement -

பொதுமக்கள் மட்டுமில்லாமல் போலீஸ் கூட பழங்குடியினர் மக்கள் மீது ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்வது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் ஜெய் பீம் படத்தில் சொல்லப்பட்ட பழங்குடியினர் கதை அப்படியே உண்மையாக நடந்தது. இது 28 வருடத்திற்கு முன்னால் நடந்த கதை. கடலூர் மாவட்டம் கம்மாபுரம் கிராமத்தில் முதனை பகுதியில் வசித்தவர் தான் ராஜாக்கண்ணு என்கிற பழங்குடியினர். ராஜாக்கண்ணு நகை திருட்டுவிட்டார் என்று விசாரிக்க போலீஸ் அவரை அழைத்து சென்றார்கள். பின் அவரை காவல்நிலையத்தில் கொடூரமாக அடித்து தாக்கி இருக்கிறார்கள். பின் ராஜா கண்ணுவை சந்திக்க அவர் மனைவி சென்று உள்ளார். ஆனால், அவரை அடித்து துரத்தி இருக்கிறார்கள். அடுத்த நாள் போலீஸ் வந்து ராஜாக்கண்ணு விசாரணையின் போது தப்பித்து விட்டார் என்று ராஜகண்ணு மனைவியிடம் கூறினார்கள்.

ராஜகண்ணுவை கொடூரமாக தாக்கியதால் காவல் நிலையத்திலேயே அவர் இறந்து விட்டார். அவர் உடலை வேறு ஒரு இடத்தில் புதை விட்டார்கள் காவல் அதிகாரிகள். இதை அடுத்து ஊர் தலைவர்கள் ராஜாக்கண்ணு மனைவி எல்லோரும் வழக்கு போட்டார்கள். பின் ராஜாக்கண்ணு மனைவி நீதிமன்றத்தில் என்னையும் என் குழந்தையும் மிகக் கொடூரமாக கொடுமை படுத்தினார்கள் என்று சொன்னவுடன் நீதிமன்றமே அழுது விட்டது. பின் சில வருடம் போராடிய பிறகு தான் அந்த ஐந்து பேருக்கு 14 வருடம் சிறைத்தண்டனை கிடைத்தது. உண்மையிலேயே அந்த நகையும், பணமும் திருடப்போன வீட்டோட மகள் தான் எடுத்து சென்று இருக்கிறார். இந்த உண்மை சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. இதை தான் சூர்யா ஜெய் பீம் படத்தில் தன்னுடைய ஸ்டைலில் சொல்ல போகிறார். அனைவரும் ஜெய் பீம் படத்திற்காக ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement