‘என்னங்க சார் உங்க சட்டம்’ – முழு விமர்சனம் இதோ.

0
2820
- Advertisement -

புதுமுக இயக்குனர் பிரபு ஜெயராம் இயக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் என்னங்க சார் உங்க சட்டம். இந்த படத்திற்கு குணா பாலசுப்ரமணியம் இசையமைத்துள்ளார். அருண் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர்களுடன் ரோகிணி, சௌந்தர்யா பாலா, நந்தகுமார், மீராமிதுன், பகவதி பெருமாள் போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழக அரசு சமீபத்தில் புதிய சட்டத்தை அறிவித்திருந்தது. இதனை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் தான் என்னங்க சார் உங்க சட்டம். இந்த படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

பீச்சாங்கை என்ற திரைப்படத்தில் நடித்த ஆர் எஸ் கார்த்திக் தான் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் முதல் பாதியில் ஜாதி, மதம், காதல், காமெடி என்று கலகலப்பாக செல்கிறது. இரண்டாம் பாதியில் ஜாதி ரீதியாக ஏற்படும் இட ஒதுக்கீடு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கருத்து, கலவரம், சண்டை, பிரச்சனை என்று நகர்கிறது.முதல்பாதியில் கதாநாயகன் பொறுப்பில்லாமல் பெண்கள் பின்னாடி சுற்றுவது, கேலி செய்வது, கிண்டல் செய்வது, பின் அவர்களை காதலித்து கழட்டி விடுகிறார்.

இரண்டாம் பாகத்தில் ஏழை பிராமணர் ஒருவர் டிஎன்பிஎஸ்சி இட ஒதுக்கீட்டில் வேலை கிடைக்காமல் அவஸ்தைப் படுகிறேன். அதேநேரம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் வந்தவுடன் கோயிலில் உள்ள உயர் சாதியினர் மனமுவந்து அவர்களுக்கு வேலை கொடுத்து விடுகிறார்கள். அதிலும் உயர்ந்த குலத்தில் உள்ள ஏழைகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். ஆனால், வேறு ஜாதியைச் சேர்ந்த பணக்காரர்கள் வேலைகளை பெறுகிறார். உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று இட ஒதுக்கீட்டில் பிரச்சனை ஏற்படுகிறது.

-விளம்பரம்-

கடைசியில் ஏழைக்கு இட ஒதுக்கீடு கிடைத்ததா? வழக்கம்போல் ஏமாற்றப்பட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. பொதுவாகவே ஏழைகளுக்கு கல்வி, வேலை என்பது அவர்களுடைய வாழ்க்கையில் எளிதாக கிடைப்பதில்லை. சட்டரீதியாக அவர்களுக்கென்று உருவாக்கப்பட்ட இட ஒதுக்கீடு இன்றைய காலகட்டத்தில் சரியாக நடக்கிறதா? என்கிற பாதையில் கதை செல்கிறது. மேலும், பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு ரொம்ப முக்கியமான ஒன்று. ஒருவர் ஒருமுறை இட ஒதுக்கீட்டை அனுபவித்தால் மற்றொரு முறை அதை அனுபவிக்கக் கூடாது என்ற வாதங்களின் அடிப்படையில் படம் உருவாகி இருக்கிறது.

படத்தில் நடித்த அனைவரும் தங்களுடைய கதாபாத்திரங்களை கன கச்சிதமாக நடித்துள்ளார். குறிப்பாக படத்தில் ரோகிணி நடிப்பின் வேற லெவல். படத்தில் ‘ஜீரக பிரியாணி’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது. பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக உள்ளது. படத்தில் முதல் பாதிக்கும், இரண்டாம் பாதிக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கிறது. காதல் காட்சிகளை கூட சரியசாக இல்லை. உயர்ந்த ஜாதி, ஏழை, பணக்காரன், இட ஒதுக்கீடு என்று தற்போது நடக்கும் அனைத்து நிலவரத்தையும் சொல்லி இருந்தாலும் இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். படம் சுமார் தான் என்று சொல்லப்படுகிறது.

பிளஸ்:

வேலை இட ஒதுக்கீட்டால் தற்போது ஏற்படும் நிலவரத்தை இயக்குனர் அழகாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.

படத்தில் நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து உள்ளார்கள்.

படத்திற்கு பின்னணி இசையும், ஒளிப்பதிவும் பக்க பலமாக உள்ளது.

மைனஸ்:

படத்தில் முதல் பாதியும், இரண்டாம் பாதியும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது.

இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

கதையின் கான்செப்ட் சரியாக இருந்தாலும் அதைக் கொண்டு போன விதம் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மொத்தத்தில் என்னங்க சார் உங்க சட்டம்– சிந்திக்க வைக்கும் படம்.

Advertisement