காக்க காக்க படத்திற்கு முதலில் வைத்த பெயர் இது தான் – போஸ்டர் இதோ.

0
4805
kakka

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டு இருக்கிறார்நடிகர் சூர்யா. சமீபத்தில் நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில் வெளிவந்த காப்பான் படம் மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. மேலும், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் சூர்யாவின் திரை பயணத்தில் மைல்கல்லாக அமைந்த படம் காக்க காக்க. இந்த படம் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன், ரம்யா கிருஷ்ணன், டேனியல் பாலாஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

kakka kakka - www.suryasaravanan.in

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சூர்யா அவர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் வேற லெவல் தூள் கிளப்பி இருப்பார். இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு குறித்து தற்போது சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு முதலில் “பின்குறிப்பு” என்று தலைப்பு வைத்தர்கள். பின்குறிப்பு தலைப்புடன் போஸ்டரும் சோசியல் மீடியாவில் வெளிவந்தது. பின் சில காரணங்களால் அந்த படத்தின் தலைப்பு காக்க காக்க என்று மாற்றப்பட்டது.

- Advertisement -

முதலில் உருவான இந்த (பின்குறிப்பு) படத்தின் போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “சூரரைப் போற்று”. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது.

இந்த டீசர் ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. மேலும், இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். இதையடுத்து சூர்யா அவர்கள் ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராஷி கன்னா நடிக்கவிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement