முக்கிய இயக்குனரின் படத்தை தவறவிட்ட விஜய்.! படத்தில் நடிக்கும் புதுமுகம்..? எந்த படம் தெரியுமா.?

0
853
vijay
- Advertisement -

தமிழில் பசங்க, நான் மஹான் அல்ல, கடைக்குட்டி சிங்கம் போன்ற ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன் புது முக நடிகர் ரோஷன் என்பவரை வைத்து ‘ஜீனியஸ் ‘ என்று படத்தை இயக்கி வருகிறார். முதன் முதலில் இந்த படத்தின் கதையை நடிகர் விஜய்யிடன் கூறினேன் என்று சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியிட்டு விழா ஒன்றில் கூறியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.

-விளம்பரம்-

vijay actor

- Advertisement -

இந்த படத்தின் பிரெஸ் மீட் விழாவில் போது பேசிய இயக்குனர் சுசீந்திரன் ‘இந்த படத்தின் கதை முதலில் ஒரு கவருவாக மட்டுமே என்னிடம் இருந்தது. இந்த படத்தின் கருவை பற்றி வெறும் ஒன் லைன் ஸ்டோரியாக மட்டுமே பல ஹீரோக்களிடம் குறிவந்தேன். பல வருடங்கள் கழித்து இந்த படத்தின் கதையை உருவாக்கினேன்.

பின்னர் அந்த கதையை தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், நடிகர் விஜய், ஜெயம் ரவி போன்றவர்களிடம் கூறினேன்.அனைவருக்குமே இந்த படத்தின் கதை மிகவும் பிடித்து போனது . ஆனால், சில பல காரணங்களால் அவர்கள் யாராலும் இந்த படத்தில் நடிக்க இயலவில்லை. இறுதியில் புது முக நடிகர் ரோஷனிடன் இந்த படத்தை கூறினேன், அவரே நடித்து தயாரிக்கவும் ஒப்புக் கொண்டார் ‘ என்று இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

suseendran

ஜீனியஸ் படம் குறித்து மேலும் தெரிவித்த இயக்குனர் சுசீந்திரன், இந்த படம் இந்தியில் சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘பி கே’ படத்தின் கதையை தழுவிய ஒரு கதையாக தான் இருக்கும், அந்த படத்தை கண்டு நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். எனவே, அந்த படத்தில் வரும் ஒரு மெசேஜ் போலவே இந்த படத்திலும் நான் ஒரு மெசேஜ் சொல்லி இருக்கிறேன்; என்று தெரிவித்துள்ளார்.

Advertisement