தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் சுசீந்திரன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவருடைய இயக்கத்தில் உருவாகியிருக்கப்படும் 2k லவ் ஸ்டோரி. இந்த படத்தில் ஜகவீர், மீனாட்சி, பாலசரவணன், ஜெயபிரகாஷ், ஜிபி முத்து உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்கு ஆனந்த் கிருஷ்ணன் ஒளிப்பதிவு, தியாகு என்பவர் எடிட்டிங் செய்திருக்கிறார்கள். இன்று காதலர் தினத்தை ஒட்டி இந்த வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் சின்ன வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக கார்த்திக்(ஜகவீர்), மோனிகா(மீனாட்சி) இருவருமே பழகி வருகிறார்கள். பள்ளி பருவத்தில் தொடங்கி கல்லூரி, தொழில் என அனைத்திலும் இருவரும் ஒன்றாகவே பயணிக்கிறார்கள். இவர்களை பார்க்கும் பலருமே இவர்கள் இருவரும் காதலர்கள் தான் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், இவர்கள் எப்போதுமே நண்பர்களாகத்தான் பழகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் பவித்ரா என்ற பெண் கார்த்திக்கை காதலிப்பதாக சொல்கிறார். கார்த்திக்கும் அந்த காதலை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், கார்த்திக், மோனிகாவுடன் பழகுவது பவித்ராவுக்கு பிடிக்கவில்லை. இதனால் மோனிகாவுடன் ஆன நட்பை முறித்துக் கொள்ள வேண்டும் என்று பவித்ரா சொல்கிறார். அதற்கு கார்த்திக், மோனிகாவுடனான நட்பை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது என்று சொல்கிறார். இதனால் பவித்ரா- கார்த்திக் காதல் பிரேக் அப் ஆகிறது.
இதை அறிந்த மோனிகா, பவித்ரா- கார்த்திக் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார். இந்த சமயத்தில் தான் விபத்தில் பவித்ரா இறந்து விடுகிறார். தன்னுடைய காதலியின் மரணத்தை தாங்க முடியாமல் கார்த்திக் ரொம்பவே மனம் உடைந்து விடுகிறார். இவரை அந்த துயரத்தில் இருந்து மீட்டெடுக்க மோனிகா ரொம்பவே போராடுகிறார். அதற்குப்பின் கார்த்திக்- மோனிகா இருவருக்குமே திருமணம் நடக்கிறது. அதற்கு பின் என்ன நடந்தது? இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா? கடைசிவரை நண்பர்களாகவே இருந்தார்களா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.
இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதை. இன்றைய காலத்து இளைஞர்களுக்கு ஏற்ப இயக்குனர் எடுத்திருக்கிறார். படம் ஆரம்பத்தின் முதல் இறுதி வரை சலிப்பில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக சேர்ந்தாலே காதல் தான் என்று சொல்லும் இந்த சமூகத்தில் இறுதிவரை
நண்பர்களாக இருக்க முடியுமா என்பதை இயக்குனர் இந்த படத்தில் சொல்லி இருக்கிறார். ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்கும் போது வரும் பிரச்சனைகள், அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை தான் படத்தில் அழகாக இயக்குனர் காண்பித்திருக்கிறார்.
2கே கிட்ஸ்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்றும் கூறப்படுகிறது. நடிகர்கள் பெரிதாக பிரபலம் இல்லை என்றாலும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆனால், சில கதாபாத்திரங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருந்தால் நன்றாக இருக்கும். நகைச்சுவை காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் சிங்கம் புலி செய்யும் அலப்பறையெல்லாம் அட்டகாசமாக இருக்கிறது. டி. இமானின் உடைய பின்னணி இசை நன்றாக இருக்கிறது. மொத்தத்தில்
2கே கிட்ஸ்களுக்கு பிடிக்கும் வகையில் இந்த படம் அமைந்திருக்கிறது.
நிறை:
காதல் கதைக்களம்
ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை கதை சலிப்பில்லாமல் செல்கிறது
நகைச்சுவை நன்றாக இருக்கிறது
ஆணும் பெண்ணும் இடையிலான நட்பு குறித்து இயக்குனர் அழகாக சொல்லி இருக்கிறார்
டி. இமான் பின்னணி இசை ஓகே
குறை:
கதைக்களம் சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்
சில இடங்களில் லாஜிக் குறைபாடுகள் இருக்கிறது
இன்னும் கொஞ்சம் பிரபலமான நடிகர்களை வைத்து எடுத்து இருக்கலாம்
மொத்தத்தில் 2k லவ் ஸ்டோரி – அழகிய பயணம்.