திருச்சிற்றம்பலம் Vs எதற்கும் துணிந்தவன் வசூல் விவரம் – சூர்யா ரசிகர்கள் நெஞ்சில் ஈட்டியை பாயத்த சுசீந்திரன் (ஏதோ வசூல் வேட்டைன்னு சொன்னாங்களே)

0
293
- Advertisement -

சூர்யா படத்தை விட தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் மிக பெரிய வசூல் செய்து இருக்கிறது என்று இயக்குனர் பாண்டிராஜ் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது தனுஷ் அவர்கள் நானே நானே வருவேன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது. செல்வராகவன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து தனுஷ் அவர்கள் வாத்தி, sir போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதன் பின் மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாக இருக்கிறது.

- Advertisement -

திருச்சிற்றம்பலம் படம்:

தற்போது தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் திருச்சிற்றம்பலம் படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷின் திருச்சிற்றம்பலம் தியேட்டரில் வெளியாகியிருக்கிறது. இதனை ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி இருந்தார்கள்.

படம் குறித்த தகவல்:

மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அதோடு தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் விஜயின் பீஸ்ட் பட வசூலை முந்தி அடித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படம் குறித்து இயக்குனர் பாண்டிராஜ் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இயக்குனர் பாண்டிராஜ் அளித்த பேட்டி:

ஆனால், வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றியடையவில்லை. சூர்யாவோட மாசிற்கு அந்த படத்தின் வசூல் குறைவு தான். ஆனால், திருச்சிற்றம்பலம் படம் அதிக வசூல் செய்து இருக்கிறது. அதேபோல் எல்லோருமே நம் ஒரு படத்தை இயக்கும்போது குழப்பி விடுகிறார்கள். நீங்கள் குடும்ப கதையை பண்ணுங்கள், இன்னொரு பக்கம் குடும்ப கதையே வேணாம்ன்னு சொல்கிறார்கள் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். Et படம் வெளியான சில நாளில் வசூல் வேட்டை என்றெல்லாம் சூர்யா ரசிகர்கள் கூறிய நிலையில் தற்போது உண்மை நிலவரத்தை கூறி சூர்யா ரசிகர்கள் நெஞ்சில் ஈட்டியை பாய்துள்ளார் சுசீந்திரன்.

எதற்கும் துணிந்தவன் படம்:

சமீபத்தில் சூர்யா அவர்கள் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சரண்யா பொன்வண்ணன், வினய், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை வேட்டையாட சூர்யா செய்யும் சூரசம்ஹாரம் தான் எதற்கும் துணிந்தவன். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

Advertisement