உங்களை கண்டிப்பாக மன்னிக்க மாட்டோம் – ஏ ஆர் ரஹ்மானை சாடும் சுஷாந்த் ரசிகர்கள்.

0
7235
arr
- Advertisement -

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் ஒட்டுமொத்த திரை உலகையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் உள்ளது. இவருடைய தற்கொலைக்கு காரணம் என்ன என்று தெரியாமல் மர்மங்கள் நிறைந்ததாக நீண்டு கொண்டே போகிறது. இருந்தாலும் நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தத்தினால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று பல தரப்பில் பேசப்படுகிறது. இதனால் பல பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் கடைசி படமான தில் பெச்சாராவை ott தளத்தில் வெளியிடுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் கொந்தளித்து போய் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

கொரோனா பாதிப்பு காரணமாக திரையரங்குகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதனால் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் எல்லாம் ஆன்லைன் ப்ளாட்ஃபார்ம்களான அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்டவற்றில் வெளியிடப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழில் அமேசான் பிரைமில் ஜோதிகா நடித்த பொன் மகள் வந்தாள் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

அந்த வகையில் நடிகர் சுஷந்த் சிங் கடைசியாக நடித்த தில் பெச்சாரா படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாக இருந்தது. ஆனால், படம் வெளியாவதற்கு முன்பே இவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சுஷந்த் சிங் நடித்த கடைசிப்படமான ‘தில் பெச்சாரா’ அடுத்தமாதம் 24ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் இப்படி பண்ணலாமா? என்று கொந்தளித்து கேள்வி கேட்டு வருகிறார்கள்.

மேலும், ஒரு உன்னதமான மனிதனின் கடைசி படத்தை தியேட்டரில் போடுங்கள். நீங்கள் பெரிய ஏமாற்றக்காரர். ஏற்கனவே நாங்கள் மனம் உடைந்து போய் உள்ளோம். நீங்கள் இப்படி செய்வது சரி இல்லை. உங்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்று வருத்தத்துடன் பதில் அளித்து உள்ளார்கள் ரசிகர்கள். ஆனால், இதற்கு முன் ஏ.ஆர்.ரகுமான் சுஷாந்த் சிங்கின் கடைசி படத்தை திரையில் வெளியிடுவதாக சொல்லி இருந்ததை ஆதரித்து ட்வீட் போட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement