கன மழையால் நிலைகுலைந்துள்ள கேரளாவுக்கு, பல்வேறு மாநில அரசுகள் உதவி செய்ய முன் வந்துள்ளன.தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழக மக்களும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகின்றனர். தமிழ்த் திரையுலகினர் பலரும் கேரளாவுக்கு நிவாரணத் தொகை வழங்கிவருகின்றனர்.
இதில் தமிழ் நடிகர்களில் அதிகப்படியாக நடிகர் விஜய் 70 லட்ச ரூபாயை வழங்கி இருந்தார். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி ' படத்தில் தோனியின் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ரசிகர் ஒருவர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால், தன்னிடம் பணமில்லை என்று சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவினை கண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் , அந்த ரசிகர்கரின் வேண்டுகோளுக்கிணங்க கேரள மக்களுக்கு 1 கோடி ருபாய் அளித்ததற்காக ஆதாரத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு 'உங்களால் தான் நான் இதை செய்தேன்' என்று அந்த ரசிகரை tag செய்துள்ளார். ரசிகருக்காக நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் செய்துள்ள இந்த நல்ல செயலால் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.A post shared by Sushant Singh Rajput (@sushantsinghrajput) on Aug 21, 2018 at 12:55am PDT





