அவரின் நாயின் பெல்ட்டால் இறுக்கி கொலை செஞ்சு இருகாங்க – ஷாக்கிங் வீடியோ வெளியிட்ட சுஷாந்தின் உதவியாளர்.

0
1133
sushant
- Advertisement -

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர் சுஷாந்த் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார். பின்னர் குரூப் டான்சராகவும், சிறு சிறு கதாபாத்திரத்திலும் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார். எம்.எஸ் தோனியின் வாழ்கை வரலாற்று படத்தில் ரீல் தோனியாகவே மக்கள் மனதில் இடம் பிடித்தார் சுஷாந்த் சிங் ராஜ்புத். பிறகு பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தார்.

-விளம்பரம்-

இவர் தற்கொலை குறித்து சோசியல் மீடியாவில் பல விதமான சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மேலும், சுஷாந்த்தின் மரணம் தற்கொலையா கொலையா என்று சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மேலும், சுஷாந்த்தின் முன்னாள் காதலியான ரே சக்ரபூர்த்தி மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சுஷாந்தின் முன்னாள் உதவியாளரான அன்கிட் ஆச்சார்யா ஷாக்கிங்வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அன்கிட் ஆச்சார்யா சுஷாந்த்துடன் உதவியாளராக இருந்து இருக்கிறார். அவரை பற்றி அனைத்தும் அவருக்கும் தெரியும். இப்படி ஒரு நிலையில் சுஷாந்த் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று அன்கிட் ஆச்சார்யா என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அவர், நான் அவருடன் 24 மணி நேரமும் இருந்திருக்கிறேன் அப்படிப்பட்ட முடிவை எடுக்கும் ஒரு நபர் கிடையாது சடலத்தின் புகைப்படத்தை நான் அடிக்கடி பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

அவரின் நாயின் பெல்ட்டால் தான் அவரின் கழுத்தை இறுக்கி கொன்று இருக்கிறார்கள். அந்த அடையாளம் தான் அவரது கழுத்தில் இருந்தது. ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டால் அவர்களின் கழுத்தில் U வடிவில் தான் அடையாளம் இருக்கும். ஆனால் ஸ்ரீசாந்த் கழுத்தில் O வடிவில் அடையாளம் இருக்கிறது. அதேபோல ஒருவர் தூக்கில் தொங்கினாள் கண்கள் வெளியே வந்து வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளி இருக்கும். ஆனால், ஸ்ரீசாந்த் விஷயத்தில் அப்படி எதுவுமே இல்லை. எனவே இது கண்டிப்பாக கொலைதான் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

Advertisement