பாலிவுட் திரையுலகின் ஜாம்பவான்களாக திகழ்ந்து கொண்டிருந்த இர்பான் கான், ரிஷி கபூர் ஆகியோரின் மரணம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. தற்போது தான் இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த நிலையில் தற்போது இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 2010 ஆம் ஆண்டு வெளியான Kai Po Che என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த சிச்சோர் என்ற படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.
இந்த படம் பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றது. இவர் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் நடித்து உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக எடுக்கப்பட்ட எம்எஸ் தோனி The Untold Story படத்தில் எம் எஸ் தோனி ஆக நடித்தார். இந்த படத்தின் மூலம் இவருக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. இந்த படம் இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்கப்பட்டது.
இப்படி பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களை தந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மும்பை பந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்த் சிங் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின் இவருடைய தற்கொலைக்கான காரணம் என்னவென்று போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறது.
மேலும், சுஷாந்தின் மரணத்திற்கு அவரின் முன்னாள் காதலியான ரே சக்ரபூர்த்தியும் ஒரு காரணம் தான் என்று சுஷாந்தின் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒருவர் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், நீ கண்டிப்பாக கற்பழிக்கப்பட்டு தான் கொலை செய்யப்படுவார் நீயாகவே தற்கொலை செய்து கொள் இல்லையென்றால் நான் ஆட்களை அனுப்பி உன்னை கொலை செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். இந்த ஸ்க்ரீன் ஷாட்டை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சுஷாந்தின் முன்னாள் காதலி சைபர் கிரைம் போலீஸ் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.