10 ஆண்டு பிரேக், திரைப்படங்களைவிட்டு விலகியதற்கு இதுதான் காரணம் – ரட்சகன் பட நடிகை சுஷ்மிதா சென்

0
512
susmitha
- Advertisement -

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சுஷ்மிதா சென். நடிகை சுஷ்மிதா சென் அவர்கள் பெங்காலி குடும்பத்தை சேர்ந்தவர். இவர் ஹைதராபாத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை முன்னாள் இந்திய விமானப்படை கமாண்டர் ஆவார். தாயார் ஒரு பேஷன் கலைஞராகவும், நகை வடிவமைப்பாளராகவும் இருந்தவர். ஹைதராபாத்தில் பிறந்த சுஷ்மிதா சென் புதுடில்லியில் வளர்ந்தார். விமானப்படை பொன்விழா கல்வி மையத்தில் கல்வி பயின்றார். பின் மைத்ரேயி கல்லூரியில் பட்டம் பெற்றவர். பிறகு சுஷ்மிதா சென் தன்னுடைய கேரியரை மாடலிங்கில் தொடங்கினார்.

-விளம்பரம்-

மேலும், யுனிவர்சல் அழகி(பிரபஞ்ச அழகி) என்ற பட்டத்தை 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவிற்கு வாங்கி தந்தவர் சுஷ்மிதா சென். அதற்கு முன்பு இவர் மிஸ் இந்தியா என்ற பட்டம் வென்றார். இப்போட்டியில் ஐஸ்வர்யா ராயைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய 18 வயதில் அழகி பட்டம் பெற்றவர். இதற்கு பிறகு தான் இவர் சினிமா உலகில் நடிக்க ஆரம்பித்தார். இவர் 1996 ஆம் ஆண்டு தஸ்தக் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

- Advertisement -

சுஸ்மிதா சென்னின் திரைப்பயணம்:

அதனை தொடர்ந்து இவர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் மிகப் பெரிய அளவிற்கு வெற்றியை கொடுத்தது. அதற்கு பிறகு இவருக்கு தமிழில் படங்கள் சரியாக அமையவில்லை என்றவுடன் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். மேலும், பாலிவுட்டில் நடிகை சுஸ்மிதா சென் அவர்கள் நிறைய படங்களில் நடித்தார். பாலிவுட்டில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்துள்ளார்.

சுஸ்மிதா சென் குடும்பம்:

பின் இவர் பல வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி உள்ளார். பிறகு இவர் 2000ம் ஆண்டில் ரெனீ என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். அதன் பின் ஜனவரி 13, 2010 அன்று அலிசா என்ற மூன்று மாத பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார் என்பது குறிப்பிடதக்கது. மேலும், பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்ந்த சுஸ்மிதா சென் கடந்த பத்து ஆண்டுகளில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. கடைசியாக இவர் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த துள்க மில் காய (Dulha Mil Gaya) என்ற பாலிவுட் படத்தில் தான் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

சினிமாவில் சுஸ்மிதா சென் நடிக்க வராத காரணம்:

பின் பத்து வருட இடைவெளிக்கு பிறகு 2020 ஆம் ஆண்டு டிஸ்னி ஹாட்ஸ்டார் தயாரிப்பில் வெளியான ஆர்யா என்ற வெப்சீரிஸ்ஸில் சுஸ்மிதா சென் நடித்தார். ஆனால், இந்த படம் திரையில் வெளியாகக் கூடிய அளவிலான படங்கள் கிடையாது. அதற்குப் பிறகும் இவர் திரையில் வெளியிட கூட படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் சுஸ்மிதா சென் இடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் கூறியது, மெயின் ஸ்ட்ரீம் சினிமா நான் விரும்பியதை தரவில்லை.

பத்து வருடத்தில் கற்று கொண்டது:

10 வருட இடைவெளியானது எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதையும், எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதையும் எனக்கு கற்றுத் தந்துள்ளது. இந்த இடைவெளியில் நான் தத்தெடுத்த இரண்டு மகள்களான ரெனி மற்றும் அலிசாவை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன். என்னுடைய கவனம் முழுவதும் என் குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனிப்பதில் தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இப்படி சுஷ்மிதா சென் அளித்த பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement