7 வருடங்களாக பிரிந்திருந்த மனைவியை ஒன்று சேர்த்த கொரோனா. ஹரித்திக் ரோஷன் நெகிழ்ச்சி பதிவு.

0
69138
- Advertisement -

தற்போது இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பயங்கரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதன் பரவல் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் இந்த பாதிப்பை தடுக்க ஏப்ரல் 15 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது அரசாங்கம். இந்த கொரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
Image result for hrithik roshan  wife

- Advertisement -

இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தமிழகத்தில் இதுவரை 26 பேர் இந்த கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இந்த கொரோனா வைரஸினால் பிரபல நடிகரின் குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. இதனால் அவர் நன்றியை தெரிவித்து உள்ளார்.

இதையும் பாருங்க : சீனாவை பற்றி அன்றே கூறியுள்ள சோ. தற்போது வைரலாகும் வீடியோ.

உலக அளவில் உள்ள ரசிகர்களை அழகால் தன் பக்கம் இழுத்தவர் நடிகர் ரித்திக் ரோஷன். இவர் பாலிவுட்டில் பல ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டாராக கலக்கி ஆண்டு இருக்கிறார். நடிகர் ரித்திக் ரோஷனுக்கும், நடிகர் சஞ்சய் கானின் மகள் சுசன்னேவுக்கும் கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி திருமணம் நடந்தது. ரித்திக் ரோஷனின் மனைவி சுசன்னே பேஷன் டிசைனிங் துறையை சேர்ந்தவர். இந்த தம்பதியினருக்கு ஹிரே கான், ஹிருதான் ஆகிய 2 மகன்கள் உள்ளார்கள்.

-விளம்பரம்-

பின் இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறு காரணமாக 2013 ஆம் ஆண்டிலிருந்து இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பின்னர் 2014ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். மேலும், ரித்திக் ரோஷன் ஜீவானம்சமாக 380 கோடி ரூபாய் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவும் இந்த கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதனால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு இந்தியரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பிரபல நடிகர் ரித்திக் ரோஷன் அவர்கள் தனது குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். தனது குழந்தைகள் வீட்டில் தனிமை உணரக் கூடாது என்பதற்காக ரித்திக் ரோஷனின் மனைவி சுசன்னே வீட்டுக்கு வந்துள்ளார். சுசன்னே தன்னுடைய மகன்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும், சுசன்னே வீட்டில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சுசன்னேவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் ரித்திக் ரோஷன்.

Image result for hrithik roshan sons

இவர் 1980 களில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானாலும் தற்போது வரை சினிமா உலகில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். இவருடைய அழகுக்கும், உடல் கட்டுக்கோப்புக்கும் என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ரித்திக் ரோஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியான “வார்” திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement