விஜய், விக்ரம் மகன்களை தொடர்ந்து ஹீரோவாக களமிறங்கும் முன்னணி ஹீரோவின் மகன்.!

0
1111
dhuruv
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக வாரிசு நடிகர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு வருகிறது. சமீபத்தில் பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ், பாலா இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘வர்மா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

-விளம்பரம்-

அதே போல விஜய்யின் மகன் சஞ்சீவ் கூட சமீபத்தில் ஒரு ஒரு குறும்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் மகனும் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சூர்யா- ஜோதிகா தம்பதியருக்கு தேவ் என்ற ஒரு மகனும் தியா என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். தற்போது தேவ்
புதுமுக இயக்குனர் ஒருவர் ஒரு சிறுவன் மற்றும் நாய்க்குட்டிக்கு இடையே உள்ள பாசம் பற்றி படம் இயக்க உள்ளதாகவும், அதற்கு சூர்யா, ஜோதிகா மகனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது..

படத்தின் கதை பிடித்திருந்தாலும், அதற்குள் மகனை படத்தில் நடிக்கவைப்பதா என சூர்யா, ஜோதிகா யோசித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

-விளம்பரம்-
Advertisement