இத்தனை 2000 ரூபாய் நோட்டுகளையும் மாற்றிவிட்டேன்,இந்த விஷயத்தில் மோடியை – எஸ்.வி சேகர் பேட்டி

0
1821
SVSekar
- Advertisement -

தற்போது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விஷயம் 2000 ரூபாய் நோட்டு மாற்றம் தான். நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. காரணம், கருப்பு பணம் அதிகமாக இருப்பதால் இதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறியது, 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறது. இனி 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகக் கூடாது.

-விளம்பரம்-

இந்த நடைமுறை உடனடியாக அமுலுக்கு வர வேண்டும். பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை இந்த மாதம் 23ஆம் தேதி வங்கிகளில் கொடுத்து கணக்குகளில் வரவு வைத்துக் கொள்ளலாம் அல்லது வேற ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறது. தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் செய்தி தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

- Advertisement -

எஸ் வி சேகர் அளித்த பேட்டி:

இந்த நிலையில் இயக்குனர் எஸ் வி சேகர் அவர்கள், 2000 ரூபாய் நோட்டுக்குள் சீப் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. சாட்டிலைட் மூலம் கண்டுபிடிக்கலாம். பண்டலாக இருந்தால் எந்த வீட்டில் இருக்கிறது என்பதை அரசு கண்டுபிடித்து விடும் என்று எஸ்வி சேகர் பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இதனை அடுத்து பலருமே சீப் வைப்பதாக சொன்ன இரண்டு ரூபாய் நோட்டுகள் செல்லாதா என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள். இந்நிலையில் இது குறித்து எஸ்வி சேகர் கூறியிருப்பது, ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை நான் பாராட்டுகிறேன்.

கருப்பு பணம் குறித்து கூறியது:

சட்டத்திற்கு புறம்பாக வருமான வரி கட்டாமல் பணத்தை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை. பணத்தை ஒரு பையில் வைத்திருப்பார்கள் இனி 4 பைகளில் வைப்பார்கள். பண அளவு கடந்து போகும் போது பயப்படுவார்கள். அதனால் கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு தான் இந்த நடவடிக்கை பயத்தை ஏற்படுத்தும். எந்த விதத்திலும் சிறு வணிகர்களையும், ஏழைகளையும் இது பாதிக்காது. இப்போது ஜிபேலேயே பணம் கட்டும் வசதி வந்து விட்டது. மேலும், ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை இப்போது செல்லாது என்று அறிவிக்கவில்லை.

-விளம்பரம்-

மோடி ஆட்சி குறித்து சொன்னது:

நான்கு மாதம் அவகாசம் கொடுத்திருக்கிறது. அதற்குள் மாற்றிக் கொள்ளலாம். அனைத்து முடிவுகளையும் விமர்சனம் செய்து கொண்டிருந்தால் நாட்டிற்கு தான் பெரிய இழப்பு வரும். இந்தியாவில் கருப்பு பணத்தை உடனடியாக ஒழிக்க முடியாது. இது 70 ஆண்டு காலமாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பிரதமர் மோடி வந்து பத்தாண்டுகள் தான் ஆகிறது. 15 ஆண்டுகளாவது ஆட்சியில் இருந்தால்தான் சரி செய்ய முடியும். 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் அனைத்தையும் சரி செய்வார். அதுவரை இந்த விஷயத்தை தேவையில்லாமல் விமர்சித்து கேள்வி எழுப்ப வேண்டாம்.

சிப் குறித்த சர்ச்சைக்கு சேகர் கூறியது:

அதுமட்டுமில்லாமல் இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் சிப் இருக்கிறது என்று கூறியது தகவல் தவறான தகவல் என்பது தெரிந்ததுமே நான் மறுப்பு தெரிவித்து விட்டேன். வேலூர் விஐடிக்கு இஸ்ரோவில் இருந்து ஒரு விஞ்ஞானி வைத்திருந்தார். அவர் சேட்டிலைட் மூலம் 2000 ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்க முடியும் என்று சொன்னதை தான் நான் பேசினேன். இன்னமும் நான் பேசியதையே பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை வெட்டியே இல்லை என்று தான் அர்த்தம். என்னிடம் மொத்தம் 32 ஆயிரம் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தது. தற்போது அத்தனை நோட்டுகளையும் நான் வங்கியில் கொடுத்து ட்ரான்ஸ்ஃபர் செய்து கொண்டேன். இப்போது என்னிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இல்லை. அதனால் எனக்கு பயமும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement