Gp முத்துவிற்கு ஆதரவாக SV சேகர் பதிவிட்ட பதிவு. காரணம் இதான்.

0
445
- Advertisement -

ஜி பி முத்து வெளியேறியது குறித்து கமலஹாசனை விமர்சித்து எஸ்வி சேகர் போட்டிருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகி விட்டது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இதில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஜி பி முத்து. இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டவர் ஜி பி முத்து தான்.

- Advertisement -

ஜிபி முத்து குறித்த தகவல்:

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி பி முத்து. இவரது நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ‘ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சி புகைப்படம் கிடையாது, எடிட் கிடையாது , வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது, இருப்பினும் இவரது வேகமாக வளரும் யூடுயூப் சேனல். இதனால் ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்கள் கண்ணும் ஜிபி முத்து மீது தான் இருந்தது.

பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்து:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலக்கி கொண்டு இருந்தார். முன்பு விட தற்போது தான் ஜி பி முத்துவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக சேர்ந்திருக்கிறது. ஆனால், சில தினங்களாக இவர் தன் மகனை பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தார். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் இடமும் நான் வெளியே போக வேண்டும். என்னை வெளியே அனுப்பி விடுங்கள் என்றெல்லாம் கூறி இருந்தார். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜி பி முத்து வெளியேறினார். இது பலருக்குமே ஷாக்கை கொடுத்திருக்கிறது.

-விளம்பரம்-

எஸ்வி சேகர் பதிவு:

இந்நிலையில் இது குறித்து நடிகரும், பாஜக உறுப்பினர் எஸ்வி சேகர் அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நீ சங்கியா என கேலி பேசப்பட்டவர் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்ட பணத்தைவிட, தன் மகன் மேல் வைத்திருக்கும் பாசமே மேல் என ஒரு நல்ல குடும்பத்தலைவனாக நிரூபித்து, கேலி பேசிய மங்கிக்கு முகத்தில் கரி பூசி நம் மனதில் உயர்ந்து நிற்கின்றார் என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் கூறியிருப்பதற்கு காரணம், கடந்த வாரம் ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவருடைய ரசிகர்கள் அவருக்கு கடிதம் எழுதி இருந்தார்கள்.

கமல் குறித்த சர்ச்சை:

அப்போது அந்த ஒரு கடிதத்தில், தலைவரை நீங்கள் பிக் பாஸ் வீட்டில் சிங்கியா, சொங்கியா மங்கியா என்று கேள்வி கேட்டிருந்தார்கள். இதற்கு கமலஹாசன், ஒன்ன விட்டுட்டாங்கள்ள நானும் அதைத்தான் நினைச்சேன் என்று கூறினார். இப்படி கமலஹாசன் சொன்னது சங்கி என்பதை தான் குறிப்பிடுகிறார் என்று நெட்டிசன்கள் கூறியிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் தற்போது எஸ் வி சேகர் பதிவு மூலம் கமலஹாசனை தான் அவர்

Advertisement