என்னோட இந்த சாதனைய யாராலும் பண்ண முடியாது – எஸ்.வி.சேகர் சொன்ன அந்த சாதனை இதுதான்.

0
595
- Advertisement -

ரஜினிகாந்த் ரூட் வேற என்னுடைய ரூட் வேற. தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் ஜெயிலர் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த வாரம் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் படத்தின் இருக்கிறார். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்த படம் வெளியான முதல் நாளிலேயே பெரிய அளவில் சாதனை படைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்த படம் லோகேஷ் கனராஜ் இயக்க போவதாக அதிகார்பபூர்வ தகவல்கள் வெளியாகி வந்தது.

ரஜினியை பற்றி எஸ்.வி சேகர் கூறியது

சென்னையில் நடைபெற்ற சினிமா விழாவில் கலந்து கொண்ட எஸ்.வி. சேகர் எம் ஜி ஆர், சிவாஜி போல தான் ரஜினியும் அவரது ரூட்டு தனி என்றும் அவரும் நானும் ஒரே வயசுக்காரங்க தான் என்றும் பேசி இருந்தார் இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் கூறிய அவர் சாதாரண நடிகர்களின் படங்களை பார்ப்பதற்கு யாராவது ஆயிரம் ரூபாய் செலவு செய்த சினிமாவுக்கு வருவார்களா? ஆனால் ரஜினிக்கு வருவார்கள். ஜெயிலர் படம் தற்போது தான் ரிலீஸ் ஆச்சு தியேட்டரில் கூட்டம் அலைமோதி வருகிறது. இருப்பினும் அவரால் என்னுடைய சாதனையை முறியடிக்க முடியாது எனக்கும் அவருக்கும் ஒரே வயசு தான்.

-விளம்பரம்-

கோடி கணக்கில் பணத்தை வைத்திருந்தால் நிம்மதி இருக்காது வீட்டு வேலைக்காரர்களிடம் சந்தேகப்படுவீர்கள் மனைவியிடமும் சந்தேகப்படுவீர்கள். கடன் இல்லாமல் வாழும் வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை அவ்வாறு அந்த வாழ்க்கை தான் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு மூன்றெழுத்து மந்திரம் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு தனக்கு பொருத்தமாக இருக்கிறது. அந்த அளவிற்கு அவர் அந்த வயதிலும் உழைத்துக் கொண்டு இருக்கிறார் அவரைப் பார்ப்பதற்கு தியேட்டர்களுக்கு படையெடுத்து ரசிகர்கள் வருகின்றனர்.

உங்க படம் ஏதாவது ஆயிர ரூபாய் டிக்கெட் வைத்தால் யாராவது வந்து பார்ப்பார்களா என்றும் அவர் பேசியிருந்தார். எனக்கும் அவருக்கும் ஒரே வயது தான் அவர் இப்போது இருப்பது போல நீங்கள் ஏன் இல்லை என்று யாரும் என்னிடம் கேட்கக் கூடாது. அவருடைய ரூட் தனி என்னுடைய ரூட்டு தனி மற்றவர்களை பார்த்து பொறாமை படக்கூடாது என்று அவர் கூறியிருந்தார். நான் இதுவரை உலகம் முழுவதும் 7000 டிராமாகளை செய்துள்ளேன் இப்போது யார் நினைத்தாலும் அந்த சாதனையை முறியடிக்க முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

Advertisement