ராம் சரண் பட வாய்ப்பை லப்பர் பந்து பட நடிகை ஸ்வாசிகா மறுத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் தான் ‘லப்பர் பந்து’. இந்த படத்தை எஸ்.லட்சுமணன் குமார் தயாரித்திருந்தார். இந்த படத்தில் ஹரிஷ் குமார் அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, சஞ்சனா, பால சரவணன், டிஎஸ்கே, ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஹரிஷ் கல்யாண் – தினேஷ் ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் போட்டா போட்டிகள், பொறாமைகள் என கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த படத்தில் கெத்து தினேஷின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஸ்வாசிகா. இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருந்தது. இவர் இதற்கு முன்பே நிறைய படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் வைகை என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகம் ஆகியிருந்தார். அதற்குப்பின் இவர் கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.
ஸ்வாசிகா குறித்த தகவல்:
அதுமட்டுமில்லாமல் இவர் மலையாளத்திலும் சீரியல்களில் நடித்திருந்தார். அப்போது இவர் தன்னுடன் நடித்த நடிகர் பிரேமை காதலித்தார். இவர்கள் இருவருமே சில வருடமாக காதலித்து வந்தார்கள். பின் ஒரு வழியாக இவர்கள் இரு வீட்டாரிடமும் சம்மதம் வாங்கி கடந்த ஜனவரி மாதம் தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்று இருந்தது. திருமணத்திற்க்கு பிறகும் நடிகை ஸ்வாசிகா கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார் .
அந்த வகையில் சமீபத்தில் சூரியின் நடிப்பில் வெளியாகியிருந்த மாமன் படத்தில் சூரியின் அக்காவாக சுவாசிகா நடித்திருந்தார்.

ஸ்வாசிகா படங்கள்:
இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றிருந்தது. இதை அடுத்து சூர்யாவின் ரெட்ரோ படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஸ்சுவாசிகா நடித்திருந்தார்.
ஸ்வாசிகா பேட்டி:
தற்போது இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என்று பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தது தொடர்பாக ஸ்வாசிகா கூறியிருப்பது, எனக்கு தொடர்ந்து அம்மா கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் நிறைய வருகிறது. சமீபத்தில் கூட நடிகர் ராம்சரணுக்கு அம்மாவாக நடிக்க கேட்டார்கள். அது எனக்கு பேர் அதிர்ச்சியை தந்தது.

ராம் சரண் பட வாய்ப்பு:
ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் படம் பெட்டி. அந்த படத்தில் தான் அவருக்கு அம்மாவாக நடிப்பதற்கு என்னிடம் கேட்டார்கள். நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். நான் அதை ஏற்று நடித்திருந்தால் எனக்கு எப்படியான ஒரு விஷயம் அமைந்து இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், இப்போது நான் ராம்சரணின் அம்மாவாக நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் தான் நான் மறுத்துவிட்டேன். எதிர்காலத்தில் அப்படி ஒரு சூழல் வந்தால் நான் யோசிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.






