அப்பாவுக்கு காது கேட்காம போயிடுச்சு, ஆனா இளையராஜா பண்ணது – பாடகர் TMS மகள் ஆதங்கம்

0
235
- Advertisement -

இளையராஜாவுக்கும் டி.எம் சௌந்தரராஜனுக்கும் இடையே நடந்த சண்டை பற்றி டி எம் சௌந்தரராஜன் மகள் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 80ஸ் காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசையில் மயங்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

அதோடு இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல உள்ளது. சமீபத்தில் லண்டன் மாநகரில் புதிய சிம்பொனி இசை கோர்வையை இளையராஜா அவர்கள் அரங்கேற்றம் செய்து இருக்கிறார். சிம்பொனி என்பது மேற்கத்திய இசை வடிவம். இதை வெறும் 34 நாட்களில் இளையராஜா உருவாக்கி இருக்கிறார். இது இளையராஜாவின் முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஆகும். இதன் மூலம் தமிழர்களின் பெருமை உலகெங்கும் பரவி இருக்கிறது.

- Advertisement -

இளையராஜா சிம்பொனி:

இதற்காக முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே இளையராஜாவை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். பின் நன்முறையில் சிம்பொனி இசையை பாடி முடித்து இளையராஜா நாடு திரும்பி இருந்தார். இதை அடுத்து இளையராஜாவுக்கு அரசு விழா நடத்த ஏற்பாடு செய்து இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாகவே இளையராஜா குறித்த செய்தி தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் இளையராஜாவுக்கும் டி.எம் சௌந்தரராஜனுக்கும் இடையே நடந்த சண்டை பற்றிய விவரம் தான் வைரலாகி வருகிறது.

டி.எம் சௌந்தரராஜன்-இளையராஜா சண்டை:

அதாவது, 1979 ஆம் ஆண்டு வெளிவந்த படம் நான் வாழ வைப்பேன். இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இந்த படத்துக்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார். என்னோடு பாடுங்கள் என்ற பாடலை டி.எம் சௌந்தரராஜன் பாடியிருந்தார். அப்போது பாடல் ரெக்கார்டிங் முடிந்த பிறகு அந்த பாடலை இளையராஜா கேட்டார். ஆனால், அவருக்கு திருப்தி கொடுக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் சிவாஜியின் பல படங்களுக்கு டி.எம் சௌந்தரராஜன் பாடல்கள் எழுதி இருக்கிறார். ஆனால், அதைப்பற்றி எல்லாம் இளையராஜா யோசிக்கவில்லை.

-விளம்பரம்-

டி.எம் சௌந்தரராஜன் மகள் பேட்டி:

உடனே அவர் என்னோடு பாடுங்கள் என்ற பாடலை டி.எம். சௌந்தர்ராஜ்க்கு பதிலாக அன்று தமிழ் சினிமாவில் பாடகராக இருந்த எஸ் பி பாலசுப்ரமணியனை வைத்து பாட வைத்திருக்கிறார். இதனால் தான் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு விட்டது. இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் டி.எம் சௌந்தரராஜன் மகள், என்னுடைய அப்பாவை பார்க்க இளையராஜா போன்ற இசையமைப்பாளர்கள் எல்லாம் எங்கள் வீட்டின் கேட்டில் எதிர் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்பாவை பார்க்க முடியாதா என்று ஏங்குவார்கள். அப்பா வந்தவுடனே கைகட்டி எல்லாம் நிற்பார்கள். அப்படி இருந்த இளையராஜா ஒரு முறை என்னுடைய அப்பாவை திட்டிவிட்டார்.

சண்டைக்கு காரணம் இது தான்:

பாடலை பாடும்போது அப்பா இந்த மாதிரி பாடலாம் என்று சொல்லி இருக்கிறார். உடனே இளையராஜா, நான் சொல்வதை தான் நீங்கள் கேட்க வேண்டும். நான்தான் இசையமைப்பாளர் என்று பேசி இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. அதற்கு பிறகு அப்பா அவருடன் பணியாற்றவில்லை. இருந்தாலும் அப்பா, இளையராஜாவை பற்றி குறை சொல்லவே மாட்டார். புகழ்ந்து பேசுவார் அப்பா. அப்பாவிற்கு சுகர் அதிகமாகி கை எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அப்போது அவர் ஐபிச்சில் பாடும் போது காது கேட்காமல் போனது. பெரும்பாலுமே ஐபிச்சில் பாடுபவர்களுக்கு காது கேட்காது. அந்த சமயத்தில் தான் இளையராஜாவிற்க்கும் என்னுடைய அப்பாவிற்கும் சண்டை வந்தது. இளையராஜா ஏதோ சொல்ல போய் அப்பாவிற்கு காது கேட்காமல் போனது என்று கூறியிருக்கிறார்.

Advertisement