இளைய மகன் திருமணத்தில் சிம்பு பற்றி வறுத்தபட்ட டி ஆர்.! என்ன சொன்னார் தெரியுமா.!

0
624
Kuralarasan
- Advertisement -

டி ராஜேந்திரனின் இளைய மகனும் சிம்புவின் சகோதரருமான குறளரசனின் திருமணம் கடந்த ஏப்ரில் 26 ஆம் தேதி நடைபெற்றது. இஸ்லாமிய முறைப்படி நடைபெற்ற இந்தத் திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து நேற்று(ஏப்ரல் 29) ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Kuralarasan

இந்த திருமண வரவேற்பில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமணத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி ராஜேந்திரடம் பத்திரிகையாளர்கள் ‘சிம்புவின் திருமணம் எப்போது ‘ என்று கேள்வி கேட்டனர்.

- Advertisement -

அதற்கு பதிலளித்த டி ஆர், இறைவன் அருளால் சீக்கிரம் நடக்கும். வெளிப்படையாகச் சொன்னால், இதுதான் எனக்கு மனத்தாங்கலாக இருக்கிறது. உங்கள் மேல் மனத்தாங்கல் இல்லை. இந்தக் கேள்வியை நீங்கள் கேட்கும் அளவுக்கு இறைவன் என்னை வச்சிருக்கானே, விதி என்னை வச்சிருக்கே அதான் என்னுடைய வருத்தம், ஆதங்கம் எல்லாமே.

அது அனைத்தும் இறைவன் மீதும், விதியின் மீதும்தான்.  கேள்வி கேட்பது உங்களுடைய கடமை. பதில் சொல்வது என்னுடைய கடமை. ஆனால், பதில் சொல்ல முடியாமல் போவது என்பது என்னுடைய சூழ்நிலை என்று சற்று வருத்தத்துடன் பேசியுள்ளார் டி ஆர்.

-விளம்பரம்-
Advertisement