‘மாநாடு’ தயாரிப்பாளர் மீது டி.ராஜேந்தர் வழக்கு – என்ன காரணம் தெரியுமா ?

0
521
maanaadu
- Advertisement -

மாநாடு படத்தின் தயாரிப்பாளர் மீது டி ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்து உள்ள சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை. பின் பல போராட்டங்களுக்கு பிறகு, நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கி இருந்தார். சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்திருந்தார். மேலும், படத்தில் சிம்புவுடன் எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த நிலையில் மாநாடு படத்தின் சேட்டிலைட் உரிமை தொடர்பாக நடிகரும், இயக்குனரும், சிம்புவின் தந்தையுமான டி ராஜேந்திரன் அவர்கள் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி டி. ராஜேந்திரன் தன் மகன் படத்தின் மீது வழக்கு தொடர்வதற்கான காரணம் என்னவென்றால், பல தடைகள், பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது. மாநாடு திரைப்படத்தை வெளியிட நாங்கள் பெரும் முயற்சிகள் எடுத்தோம்.

ஆனால், எங்களை கலந்து ஆலோசிக்காமல் அந்தப்படத்தின் சாட்டிலைட் உரிமையை விற்கப்பட்டு உள்ளது. அதனால் மாநாடு படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி ராஜேந்திரன் தன்னுடைய மனுவில் கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு மாநாடு படக்குழுவினர் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement