கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட பழக்கம், IT வேலையை விட்டுவிட்டு சினிமாவிற்கு வந்த டாணாகாரன் முருகனின் கதை.

0
854
Taanakkaran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், முன்னணி நடிகர் பிரபுவின் கணேசனின் ஆவார். இவர் லண்டனில் படிப்பை முடித்தார். பின் ஆரம்பத்தில் இவர் சினிமாவில் உதவிஇயக்குனராக இருந்தார். அதற்கு பிறகு லிங்குசாமியின் தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் இவருக்கு பெயர் வாங்கித் தந்தது. இதனை தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளக்கார துரை, இது என்ன மாயம், வீர சிவாஜி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த படம் புலிக்குத்தி பாண்டி. இந்த படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து விக்ரம் பிரபு அவர்கள் தற்போது ‘டாணாக்காரன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார் மற்றும் எஸ்ஆர் பிரபு தயாரித்திருக்கிறார். இந்த படத்தை தமிழ் இயக்கி இருக்கிறார். இவர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் தமிழ் எடுத்திருக்கும் திரைப்படம் ‘டாணாக்கரன்’ சமீபத்தில் தான் ஓடிடியில் வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : Eliminationதா சொல்லாமகொள்ளாம பண்ணிட்டாங்க, பைனலுக்காவது ஜூலிய கூப்பிட்டாங்களா இல்லையா ? விவரம் இதோ.

- Advertisement -

‘டாணாக்காரன்’ படம் பற்றிய தகவல்:

இந்த படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், பலரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரமான முருகன் கேரக்டரில் கார்த்திக் கண்ணன் நடித்திருக்கிறார். இவர் இந்த படத்தில் நடித்த அனுபவத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியது, இந்த படத்தின் சூட்டிங் வேலூரில் நடந்தது. அப்போது அங்கு அதிகமான வெயில் இருந்த நேரம். காலையிலிருந்து வெயிலில் ஓடிக்கொண்டே இருப்போம். நாங்கள் பட்ட எல்லா கஷ்டத்திற்கும் பலன் கிடைத்திருக்கும். நான் முதலில் ஐடியில் தான் வேலை பார்த்து கொண்டிருந்தேன்.

கார்த்திக் கண்ணன் அளித்த பேட்டி:

அப்போது வாரத்தின் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட போவேன். அப்போது தான் இந்த படத்தின் உதவி இயக்குனர் என்னைப் பார்த்துவிட்டு நடிக்க கூப்பிட்டார். எனக்கும் படத்தில் நடிக்க ஆர்வம் இருந்ததால் உடனே ஓகே சொல்லிவிட்டேன். இதுக்கு முன்னாடி நான் சில ஷார்ட் பிலிம்ஸ் நடித்திருக்கிறேன். படத்தில் நடிக்க இருந்ததால் ஐடி வேலையை விட்டுவிட்டு அதற்கு பிறகு இயக்குனர் தமிழுடன் அறிமுகம் ஏற்பட்டது. இரண்டு பேருமே நல்ல நண்பர்களாகி விட்டோம். ஐடி வேலையை விட்டுவிட்டு சூட்டிங் போன சமயம் தான் கொரோனா வந்தது. கையில் வருமானம் இல்லை. எனக்கு குழந்தை பிறந்திருந்தது. எப்போதும் நம்பிக்கை விடாமல் தன்மை நம்பிக்கையோடு இருந்தேன். படம் ரிலீசுக்கு பிறகு எல்லாமே மாறும் என்று நம்பினேன் எல்லாமே மாறி இருக்கு.

-விளம்பரம்-

விக்ரம் பிரபு பற்றி கூறியது:

என்னோட வீட்டில் அப்பா அம்மா மனைவி மனைவி என்று எல்லோரும் என்னை நம்பினார்கள். படம் ரிலீஸ் ஆன உடனே நைட் படத்தை பார்த்துவிட்டு பலரும் போன் பண்ணி எனக்கு வாழ்த்து சொன்னார்கள். என்னுடைய முகம் பார்த்து இந்நோசெண்ட் என்று சொல்லுவாங்க. அதை உடைக்கிற மாதிரி நெகட்டிவ் கதாபாத்திரம் பண்ண ஆசைப்படுகிறேன். இந்த படம் பார்த்துவிட்டு நிறைய வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன். படத்தில் விக்ரம் பிரபு சார் ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்டாக மாறி பழகினார். நடிப்பதற்கு நிறைய ஸ்கோப் கொடுத்தார். எந்த சந்தேகம் என்றாலும் சொல்லுவார். எந்த தயக்கமும் இல்லாமல் பழகினார். படம் பார்த்துவிட்டு என்னுடைய நடிப்பு நல்லா இருக்கு என்று பிரபு சார் சொன்னாதாக போன் பண்ணி சொன்னார்.

போலீஸ் கதாபாத்திரம் பற்றி கூறியது:

அது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. வாழ்க்கையில் போலீஸ் யூனிபார்ம் போட்டு நடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. விக்ரம்பிரபு சாருக்கும் கிரிக்கெட் பிடிக்கும். இதனால் கிரிக்கெட் பற்றி நிறையவே பேசிக்கொண்டிருப்போம். பாடி சேமிங் என்கிற விஷயம் படத்தில் பெருசா இருக்காது. என் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையும் எல்லாத்தையும் பார்த்தப்போ முருகன் கதாபாத்திரம் தன்னம்பிக்கையான கேரக்டராக எனக்கு தெரிந்தது. இந்த படம் எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது என்று கூறினார்.

Advertisement