குடித்து விட்டு இரவில் ஹோட்டலில் ரகளை செய்த டாப்ஸி.! நடிகரின் ஷாக்கிங் பேட்டி.!

0
209
Tapsee

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை டாப்ஸி. தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும்,தமிழ் தெலுங்கு மலையாளம் என்று பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.

Vicky Kaushal and Taapsee Pannu recall a hilarious drunken night memory

இறுதியாக தமிழில் ‘காஞ்சனா 2’ திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை என்றாலும் அம்மணி இந்தியில் படு பேமஸ். இவர் நடித்த பல்வேறு ஹிந்தி படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துள்ளது. தற்போது இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் டாப்ஸி.

இந்த நிலையில் ஹோட்டலில் கொடுத்துவிட்டு கலாட்டாவில் ஈடுபட்டதாக நடிகை டாப்ஸியை தெரிவித்துள்ளார். நடிகை டாப்சி இந்தி நடிகர் விக்கி கவுசல் என்பவருடன் மன்மர்சியான் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விக்கி மற்றும் டாப்ஸி பேசுகையில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஹோட்டலில் இருந்த போது இருவரும் குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர்.

இது குறித்து பேசிய டாப்ஸி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஹோட்டல் ஒன்றில் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது நான் அதிகமாக குடித்துவிட்டு ஹோட்டலில் இருந்த கார்டனில் படுத்துக்கொள்ளலாம் என்று விக்கியுடன் கூறினேன். ஆனால், விக்கி வேண்டாம் என்றார். இருப்பினும் நான் அடம்பிடித்துகொண்டே இருந்தேன். பின்னர், விக்கி என்னை விட்டு சென்று விடுவேன் என்று கூறியதால் அங்கிருந்து நான் கிளம்பி வந்து விட்டேன். அன்று இருவருமே அதிக குடிபோதையில் இருந்தோம் அன்று நடந்ததை எண்ணி நான் மிகவும் சங்கடப் பட்டேன் என்று கூறியுள்ளார்