நீங்கள் மரியாதையாக பேசினால் நானும் மாரியாதையாக பேசுவேன் – தாமதமாக வந்தது குறித்து கேட்டதால் டாப்ஸி கோபம்.

0
154
taapse
- Advertisement -

டாப்சி பன்னு தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார். இவர் பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர். மாடலிங் துறையில் நுழையும் முன்னர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார். 2010 இல் சும்மாண்டி நாதம் என்னும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையில் நுழைந்தார். இவர் ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் . இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கு என ஒரு இடம் பிடித்தவர்.

-விளம்பரம்-

இந்தியில் முன்னனி நடிகையாக வலம் வரும் டாப்சி :-

அதனைத் தொடர்ந்து நடிகை டாப்சி அவர்கள் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது டாப்சி அவர்கள் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் லீட் நாயகியாக வலம் வர முடியவில்லை என்றாலும், இந்தியில் இவர் நடித்த, ’பிங்க்’, ’நாம் ஷபானா’ படங்கள் அவரை கவனிக்க வைத்தன. இதையடுத்து மேலும் பல இந்தி படங்களில் நடித்தார். நடிகை டாப்ஸி இறுதியாக கேம் ஓவர் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் மீண்டும் ஹிந்தியில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்தியில் இரண்டு படங்களில் நடித்து வரும் டாப்ஸி தமிழில் ஜன கன மன என்ற படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

பேட்மிட்டன் வீரரை காதலிக்கும் டாப்சி :-

நடிகை டாப்சி அவர்கள் வெளிநாட்டு நபரை காதலித்து வருவதாக 2020ஆம் ஆண்டு தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வதந்திகள் வந்து கொண்டுவந்தனர். நடிகை டாப்ஸியும் டென்மார்க்கில் வசிக்கும் பூ பந்து வீரர் மத்தியாஸ் போவும் காதலிப்பது உண்மையானது. இந்நிலையில் இது குறித்து நடிகை டாப்ஸிடம் கேட்டபோது அவர் கூறியது, எனக்கும் பேட்மிட்டன் வீரன் மத்யாசுக்கும் இடையே காதல் இருப்பது உண்மைதான். என் குடும்பத்தினர் எங்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தால் தான் எங்களுடைய காதல் திருமணத்தில் முடியும். ஒருவேளை எங்கள் பெற்றோர்களின் சம்மதம் கிடைக்காவிட்டால் நாங்கள் எங்கள் காதலை நிராகரித்து திருமணம் செய்து கொள்ள மாட்டோம். பிறகு நாங்கள் இருவருமே அவரவர் வேலைகளை செய்வது என்று முடிவு செய்து இருக்கிறோம்.இந்த முடிவில் இரண்டு பேருமே உறுதியாக இருக்கிறோம் என்று கூறினார்.

டாப்சியிடம் மரியாதை குறைவாக பேசிய செய்தியாளர் :-

மிதாலி ராஜ் என்ற கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கையை தழுவி படமாய் எடுக்கப்பட்ட படம் தான் சபாஷ் மிது இந்த படத்தில் டாப்ஸி நடித்திருக்கிறார். இதற்கு அடுத்தார் போல் அனுராக் காஷ்யாப் என்ற பிரபல இயக்குனரின், இயக்கத்தில்
“டோப்ரா” என்னும் படத்தில் நடித்திருக்கிறார் இந்த படம் வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி இந்தி மொழியில் வெளியாக உள்ளது. இதை அடுத்து மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகை டாப்ஸி. அவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் பொழுது செய்தியாளர் ஒருவர் டாப்ஸியை புகைப்படம் எடுப்பதற்கு போஸ் கொடுக்க சொல்ல மற்றொரு செய்தியாளர் இந்த நிகழ்ச்சிக்கு எதற்காக இவ்வளவு தாமதமாக வருகிறீர்கள் என்று மாரியாதை இல்லாமல் பேசியிருப்பார் போல அதற்கு உடனடியாக தன் கோபத்தை வெளிகாட்டினார்.

-விளம்பரம்-

இதனால் கோபமடைந்த டாப்சிக்கும் அந்த செய்தியாளருக்கும் இடையில் சிறிது நேரம் கலகலப்பு ஏற்பட்டது. அந்த செய்தியாளரிடம் டாப்சி கூறியது. நான் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் உரிய நேரத்தில் சென்று விடுவேன் என்றும் என் வேலைகளை நான் சரியாகத்தான் செய்கிறேன் என்றும் என்னுடன் நீங்கள் மரியாதையாக பேசினால் நானும் மரியாதையுடன் பேசுவேன் அதுமட்டுமில்லாமல் கேமரா என் பக்கம் இருப்பதால் நான் பேசுவது மட்டும் தான் தெரியும் கேமராவை உங்கள் பக்கம் இருந்தால் நீங்கள் எப்படி பேசுகிறீர்கள் என்றும் தெரிந்து இருக்கும் என்று கையெடுத்து கூப்பி அவர்களிடம் பேசிக்கொண்டு அந்த இடத்தில் இருந்து டாப்ஸி நகர்ந்து சென்று விட்டார் இந்த வீடியோ இப்போது இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

Advertisement