தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் ராம் சரண். இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார்.

தந்தையைப் போலவே மகனும் டோலிவுட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு நடிகர் ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த கேம் சேஞ்சர் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது ராம் சரணின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பெத்தி. புச்சி பாபு சனா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சிவராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து மற்றும் ஜகபதி பாபு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
பெத்தி பட சர்ச்சை:
மேலும் இந்த படத்தில் நடிகை ஜான்வி கபூர் அவர்கள் 'அச்சியம்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குறிப்பாக இந்த படத்தில் ஜான்வியின் கதாபாத்திரம் காட்டப்பட்ட விதம் ரொம்ப மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. கவர்ச்சிக்காகவே இந்த படத்தில் ஜான்சியை வைத்திருப்பது போலவே இருக்கிறது. படத்தில் பெண்களுக்கு எதிராக வன்கொடுமை, துன்புறுத்தல், சம்மதம் இல்லாத செயல், தேவையற்ற வசனங்கள் போன்ற பல விஷயங்கள் இணையதளத்தில் பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. இதை அடுத்து படத்தின் இயக்குனர் மன்னிப்பு கேட்டு இருந்தார். இதை அடுத்து நடிகைகள் பலர் ஜான்வி கபூருக்கு சப்போர்ட்டாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

டாப்ஸி பேட்டி:
மேலும், இந்த சர்ச்சைக்கு நடிகை ஜான்வி, படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இப்படி காட்டப்படும் என்று எனக்கு தெரியாது. படத்தினுடைய இயக்குனர் உடைய கிரியேட்டிவிட்டி முடிவு என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகை டாப்ஸி தென்னிந்த சினிமா குறித்து அளித்த பேட்டியில், தென்னிந்திய சினிமாவில் நடிகைகளுடைய தோற்றம் உடலமைப்பு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சில சமயங்களில் நடிகைகளை 'பேடட் பிரா' (padded bra) போட சொல்கிறார்கள். அப்போது தான் கேமராவில் அவர்களுடைய தோற்றம் இன்னும் கவர்ச்சியாகவும் போல்டாகவும் தெரியும்.

கவர்ச்சி விவகாரம்:
அதுவும் இந்த மாதிரி விஷயங்களை நேரடியாக சொல்லாமல் ஸ்டைலிங் டீம், உதவி ஆட்கள் மூலமாக சொல்வார்கள். இது சில நேரங்களில் ரொம்பவே சங்கடமாக இருக்கும். நானும் இந்த மாதிரி அனுபவங்களை எல்லாம் கடந்து வந்திருக்கிறேன். சில தோற்றம் எதிர்பார்த்தப்படி இல்லை என்றால் மீண்டும் மாற்ற சொல்வார்கள். இது மனரீதியாக சங்கடப்படுத்தும் ஒரு அனுபவமாக இருக்கும். சில படங்களில் கேமரா கோணங்கள் குறிப்பாக உடலின் உடைய சில பாகங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள். இது ரசிகர்களுடைய கற்பனையை தூண்டுவதற்கும் படத்தினுடைய கவர்ச்சியை அதிகப்படுத்துவதற்கும் தான் செய்யப்படுகிறது என்று கூறியிருந்தார்.






