அஜித் பட நடிகைக்கு கிடைத்த தண்டனை – ஏன் தெரியுமா? வைரலாகும் வீடியோ.

0
1181
tapsee
- Advertisement -

தெலுங்கு திரையுலகில் 2010-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘ஜும்மாண்டி நாடம்’. இந்த படத்தினை இயக்குநர் கே.ராகவேந்திர ராவ் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக மனோஜ் மஞ்சு நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை டாப்சி பன்னு நடித்திருந்தார். இது தான் நடிகை டாப்சி பன்னு அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம். இதனைத் தொடர்ந்து தமிழ் திரையுலகில் ‘ஆடுகளம்’ என்ற படத்தின் மூலம் என்ட்ரியானார் டாப்சி பன்னு.

-விளம்பரம்-

தனுஷ் கதையின் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தினை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. ‘ஆடுகளம்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு தமிழில் ஜீவாவின் ‘வந்தான் வென்றான்’, ‘தல’ அஜித்தின் ‘ஆரம்பம்’, ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 2’, கெளதம் கார்த்திக்கின் ‘வை ராஜா வை’, அஷ்வின் சரவணனின் ‘கேம் ஓவர்’ என அடுத்தடுத்து பல சில படங்களில் நடித்தார் டாப்சி பன்னு.

- Advertisement -

தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை டாப்சி பன்னு, ஹிந்தி திரையுலகிலும் நுழைந்து பல படங்களில் நடித்தார். நடிகை டாப்சி பன்னுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது.

Arrambam (2013)

தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்நிலையில், நடிகை டாப்சி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

2018-ஆம் ஆண்டு டாப்சி நடிப்பில் வெளி வந்த ஹிந்தி திரைப்படம் ‘சூர்ணா’. இப்படத்தில் நடிகை டாப்சி ஹாக்கி ப்ளேயராக வலம் வந்திருப்பார். படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் அவருக்கு பனிஷ்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கும். அக்காட்சி எடுக்கப்பட்ட போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ தான் இது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Advertisement